உயர்கல்வி உதவி தொகை திட்டம்; மாணவியர் விபரம் பதிய உத்தரவு

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை : தமிழக அரசின் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின்படி, இளநிலை படிப்புகளை மேற்கொள்ளும் மாணவியரின் விபரங்களை, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் வரும், 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, தமிழக உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. கல்லுாரி கல்வி இயக்குனர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், அனைத்து வகை பல்கலைகளின் பதிவாளர்களுக்கு, தமிழக உயர்கல்வி முதன்மை செயலர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : தமிழக அரசின் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின்படி, இளநிலை படிப்புகளை மேற்கொள்ளும் மாணவியரின் விபரங்களை, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் வரும், 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, தமிழக உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.latest tamil newsகல்லுாரி கல்வி இயக்குனர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், அனைத்து வகை பல்கலைகளின் பதிவாளர்களுக்கு, தமிழக உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள் உள்ளிட்டவற்றில், இளநிலை படிக்கும் மாணவியருக்கான மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம், நடப்பு கல்வி ஆண்டில் செயல்படுத்தப் படுகிறது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலையில் உயர்கல்வியை தொடரும் மாணவியர், இத்திட்டத்தில் பயன்பெறுவர்.இதற்காக இன்று முதல், 30ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சிறப்பு முகாம் அமைத்து, https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவியரின் விபரங்களை பதிவிட வேண்டும்.அரசு பள்ளிகள், மாநகராட்சி, பஞ்சாயத்து ஒன்றியம், ஆதி திராவிடர், பழங்குடியினர், கள்ளர் சீரமைப்பு, வனத்துறை பள்ளிகள் மற்றும் அரசால் நிர்வகிக்கப்படும்


latest tamil newsபள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த, மாணவியரின் வங்கி கணக்கு மற்றும் அரசு பள்ளி விபரங்களை, இதில் பதிவு செய்ய வேண்டும்.ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல் ஆகியவற்றை, மாணவியர் கல்லுாரிகளுக்கு எடுத்து வந்து பதிவு செய்ய வேண்டும். மாணவியர் தாங்களாகவும் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இந்த பதிவுகளை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதுகுறித்து, கல்லுாரி முதல்வர்களுக்கு உரிய வழிமுறைகள் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarthy R - Minjur ,இந்தியா
27-ஜூன்-202208:35:58 IST Report Abuse
Aarthy R Good
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48085,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202213:28:20 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     பெண்கள் அப்படி விட்டு செல்லக்கூடாது படிக்கக்கூடாது வேலைக்கு செல்ல கூடாது என்று எல்லாம் சொல்லி அன்று பெண்களை அடிவைத்து மனு சாஸ்திரம் அனால் பெரியார் பெண் கல்வி முக்கியம் பெண்கள் படிக்கணும் என்று சொன்னவர் தான் பெரியார் அந்த பெண்ணிருக்கு படிக்கச் மாதம் 1000 உதவி தொகை என்று அறிவித்தவர் தான் ஸ்டாலின்
Rate this:
Soumya - Trichy,இந்தியா
26-ஜூன்-202220:30:46 IST Report Abuse
Soumyaவளர்த்த மகளையே மணந்தவன் தானேடா சொரியான்...த்தூ...
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
26-ஜூன்-202213:24:20 IST Report Abuse
Dhurvesh பெண்கள் இலவசமா BUS இல் செல்லலாம் என்கிற திட்டம் அதே மாதிரி இந்த பெண்கள் படிக்கும் திட்டத்திற்கு உதவி இது என்றும் அரசுக்கு துணை இருக்கும்
Rate this:
Soumya - Trichy,இந்தியா
26-ஜூன்-202220:34:01 IST Report Abuse
Soumyaகுடும்ப தலைவிகளுக்கு அந்த ஆயிரம் ஓவா பத்தி புரூடா விடியலின் வாக்குறுதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X