பத்திரப்பதிவு ஐ.ஜி., தூங்குகிறாரா? உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை : 'துறை அதிகாரிகளுக்கு எதிராக புகார் வந்து ஓராண்டு ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் வாயிலாக, பத்திரப்பதிவு ஐ.ஜி., துாங்குவதாக தெரிகிறது' என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி; குமாரபாளையத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக, ரியல் எஸ்டேட் தரகர்கள் அபகரித்துள்ளனர் என்று
பத்திரப்பதிவு, ஐ.ஜி., தூங்குகிறாரா, உயர்நீதிமன்ற நீதிபதி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : 'துறை அதிகாரிகளுக்கு எதிராக புகார் வந்து ஓராண்டு ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் வாயிலாக, பத்திரப்பதிவு ஐ.ஜி., துாங்குவதாக தெரிகிறது' என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி; குமாரபாளையத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக, ரியல் எஸ்டேட் தரகர்கள் அபகரித்துள்ளனர் என்று புகார் அளித்தார்.மேலும், சார் பதிவாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட பதிவாளர் சுரேஷ்குமார் ஆகியோரின் துணையுடன் தரகர்கள் செயல்பட்டுள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு, புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காததால், வழக்குப் பதிவு செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் குறைப்புக்காக, நிலத்தின் மதிப்பை குறைவாக காட்டியிருப்பதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


latest tamil news


அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையால், அரசுக்கு 4 லட்சம் ரூபாய் வரை இழப்பு எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மே மாதம், பத்திரப்பதிவு ஐ.ஜி.,க்கு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து பரிந்துரை அனுப்பப்பட்டது, ஆவணங்கள் வாயிலாக தெரிகிறது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசிடம் விளக்கம் கேட்டு, அறிக்கை அளிக்க அவகாசம் கோரினார்.

ஓராண்டாக, இந்த விஷயத்தில் பத்திரப்பதிவு ஐ.ஜி., துாங்கி கொண்டிருப்பதாக தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கு எதிரான, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழான புகார்களில், இதுபோன்று செயல்படுவது கண்டனத்துக்குரியது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.விசாரணையை, ஜூலை 7க்கு, நீதிபதி டீக்காராமன் தள்ளி வைத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜூன்-202219:47:52 IST Report Abuse
Sriram V CM came with lots of aspirations from people so that he will take action against corrupt officials. But it seems CM is under the influence of cotorie
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
26-ஜூன்-202219:28:36 IST Report Abuse
madhavan rajan எதற்காக ஓராண்டாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவதற்கு பதினைந்து நாட்கள் சாவகாசமா? நீதியும் தூங்கிவிடும்.
Rate this:
Cancel
jysen - Madurai,இந்தியா
26-ஜூன்-202217:29:51 IST Report Abuse
jysen He won't be enough time to oversee the working of the cash counting machines at his disposal. How can he sleep peacefully? Let him sleep peacefully. The greatest joke on the earth is the presence of boards in the sub register's office with the words" Taking and giving bribe is an offence" and the phone numbers of some vigilance department persons. Kudi Kudiyei Kedukkum Kathai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X