மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்!

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழகத்தில் சில கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது என்ற தகவல்கள் வருகின்றன. இதனால், இன்னும் முடிவுகள் வராத சி.பி.எஸ்.இ., மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் மிகவும் பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கின்றனர்.எனவே, சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பாடத்திட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்த பிறகே,
பாலகிருஷ்ணன், கார்த்தி, புகழேந்தி

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழகத்தில் சில கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது என்ற தகவல்கள் வருகின்றன. இதனால், இன்னும் முடிவுகள் வராத சி.பி.எஸ்.இ., மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் மிகவும் பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கின்றனர்.எனவே, சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பாடத்திட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்த பிறகே, கல்லுாரிகளில் சேர்க்கை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாஸ்தவமான கோரிக்கை தான்... சி.பி.எஸ்.இ., மாணவர்களை, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதை, முதலில் அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்!


சிவகங்கை எம்.பி., கார்த்தி பேச்சு: தாங்களே எழுதிய தீர்மானங்களை முன்மொழிந்து அவர்களே நிராகரித்தது அ.தி.மு.க., தான். இது, வேடிக்கையாக உள்ளது. அ.தி.மு.க., வரலாற்றில் ஒற்றைத் தலைமையில் பணியாற்றியுள்ளனர். தற்போது, அந்த திசையை நோக்கித்தான் செல்கின்றனர். அவர்கள் தான் அதை முடிவெடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் டில்லி சென்றது, அவரது முதலாளியை பார்க்கத்தான்.

இதே, அவர் டில்லி சென்று, காங்., தலைமையை சந்தித்து இருந்தால், வரவேற்று புகழாரம் சூட்டியிருப்பீங்க, அப்படித்தானே!


மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் பேட்டி: மதுரையில் நாங்கள் செய்யும் கட்சி பணியால் பா.ஜ., மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. கட்சியின் மாநில தலைமையும் தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.மதுரையில் பா.ஜ.,வின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் மக்கள், தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த, நான் தி.மு.க.,வில் இணைய போவதாக அக்கட்சியினர் புரளி கிளப்புகின்றனர்.

ஏன்னா, உங்க வரலாறு அப்படி... முதல்ல, ம.தி.மு.க., அப்புறம் தி.மு.க., அங்கிருந்து பா.ஜ.,ன்னு அடிக்கடி தாவியதால தான், இப்படி புரளியும் கிளம்புது!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: சென்னை, நந்தம்பாக்கத்தில், அடையாறு ஆற்றின் ஓர் பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ள, 6 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை பகுதியாக அறிவிக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலம், அடையாற்றின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் இருப்பதை சி.எம்.டி.ஏ., வெளியிட்ட வரைபடம் மூலம் அறிய முடிகிறது. சென்னை மாநகரில் வெள்ளத்தை ஏற்படுத்தும் சக்தியாக அடையாறு மாறியுள்ள நிலையில், இந்த விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டப்படுவது கவலை அளிக்கிறது.

இதன் பின்னணியில், பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கை இருக்கலாம் என்ற சந்தேகம் தான் எழுகிறது... பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் கனிவான கவனத்திற்கு...!


அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி: பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் காரை பஞ்சராக்கினர். பேப்பர் மற்றும் தண்ணீர் பாட்டிலால் தாக்கினர். பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம் நடத்தி இருக்கின்றனர். பொதுக்குழு விவகாரத்தால், பன்னீர்செல்வத்துக்கு அனுதாப அலை உருவாகியிருக்கிறது. சசிகலாவை பார்த்து விட்டோம்; அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.


latest tamil newsகட்சியில இன்றைக்கு பன்னீர்செல்வம் தரப்பு, 'வீக்' ஆனதற்கு, சசிகலா தரப்போட அவர் வச்சிருந்த மறைமுக கூட்டணியும் முக்கிய காரணம்கிறதை நீங்களே போட்டு உடைச்சுட்டீங்களே!


தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி: தற்போது, அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேரடி பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைந்து, கட்சியை வழிநடத்த வேண்டும்.

'அ.தி.மு.க., வலுவாக இருந்தால் தான், வருங்காலத்தில் அந்த கட்சியின் தோள் மீதும் ஏறி சவாரி செய்ய முடியும்' என்ற உங்க நல்லெண்ணம் நன்கு புரிகிறது!


உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து அறிக்கை: விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெற்பயிர்களை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசு, விவசாயிகள் விளைவிக்கும் நெற்பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கிறது.

'மதுக்கடைகளால ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கொட்டுது... விவசாயிகளால வீண் செலவு தான்' எனக் கருதி விட்டனரோ!


தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் காமராஜ் பேட்டி: அ.தி.மு.க., ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சொல்வதை செய்வோம்' என்றார். அந்த நம்பிக்கையில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் உள்ளனர். ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்து, 14 மாதங்கள் கடந்தும் இன்னும் எங்களுக்கு, 'விடியல்' தென்படவில்லை.

உங்களுக்கு மட்டுமா...? உங்க பின்னாடி நிறைய பேர் வரிசைகட்டி நிற்கிறாங்க!


தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி அறிக்கை: முதல்வரே... உங்களின் சமூக நீதி கொள்கையை நிரூபிக்க அருமையான வாய்ப்பை பா.ஜ., வழங்கிஉள்ளது. மலை ஜாதி பெண்மணிக்கு ஓட்டளித்து, சமூக நீதியை நிலைநாட்டி காட்ட வேண்டும். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் வெறும் பேச்சால் சொல்லி கொண்டிருந்ததை, பிரதமர் மோடி நிலைநாட்டி இருக்கிறார்.

நீங்க எப்படி துாண்டில் போட்டாலும், அந்த மீன் உங்க வலையில சிக்காது!புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
26-ஜூன்-202221:19:36 IST Report Abuse
r.sundaram அரசு கல்லூரிகளை தவிர தமிழகத்தில் மற்ற கல்லூரிகள் எல்லாம் அரசியல் வாதிகளிடமும், ஆளுபவர்களுக்கு வேண்டிய சிறுபான்மையினரிடமும் தான் உள்ளன. இந்த உண்மை இவருக்கு தெரியாதா என்ன? ஆக சொல்ல இந்திய இடத்தில் சொல்லாமல் ஏன் பொது வெளியில் சொல்கிறார்? பயமா?
Rate this:
Cancel
26-ஜூன்-202218:41:07 IST Report Abuse
இளிச்சவாயன்  ,,,,
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
26-ஜூன்-202215:10:35 IST Report Abuse
a natanasabapathy Kalaththil iranki poraada viyathuthaane
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X