சென்னை: தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக அனைத்து உதவிகளையும் ஆதரவினையும் திமுக அரசு நல்கி வருகிறது, தொழில் நிறுவனங்களுக்காக இதுவரை ரூ.911.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பல்வேறு பன்னாட்டு மற்றும் இந்தியாவின் பல பெருந்தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு நம் மாநிலத்தில் உள்ள மிகச்சிறந்த தரத்திலும், மிகப்பெரும் எண்ணிக்கையிலான அமைந்துள்ள சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு முக்கிய காரணமாகும். அனைத்து தரப்பினரை உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் புத்தாக்கங்கள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதிலும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 27 ம் தேதி பன்னாட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாளாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள சுமார் 50 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு கோடி நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்பை அளிக்கின்றன. பொருளாதார மந்த நிலையினாலும் கோவிட் காரணமாகவும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டும் வகையில் பட்ஜெட்டில், கடந்த ஆண்டை விட 49 ச தவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக ரூ.911.50 கோடி ஒதுக்கீடு செய்து பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக அனைத்து உதவிகளையும், ஆதரவினையும் நல்கி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.