அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு: கவர்னர் உத்தரவு

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மும்பை: அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மஹாராஷ்டிரா மாநில போலீஸ் கமிஷனர் மற்றும் மும்பை போலீஸ் கமிஷனருக்கு மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷியாரி கடிதம் எழுதியுள்ளார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிவசேனா மூத்த தலைவரும், மாநில
uddhavthackeray, governor, Maharastra, eknathshinde, shivsena,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மஹாராஷ்டிரா மாநில போலீஸ் கமிஷனர் மற்றும் மும்பை போலீஸ் கமிஷனருக்கு மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷியாரி கடிதம் எழுதியுள்ளார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிவசேனா மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார். அவருடன், 40 சிவசேனா எம்.எல்.ஏ.,க்களும், ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் அசாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். இதனால், மஹாராஷ்டிராவில் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. சமாதான பேச்சு நடத்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தும் பலனில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு விலக்கி கொண்டது.


latest tamil news


இந்நிலையில், ரமேஷ் போனரே, மங்கேஷ் குடால்கர் உள்ளிட்ட 15 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஹா., மாநில டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனருக்கு அம்மாநில கவர்னர் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ.,க்களின் மனைவியுடன் பேச்சு


latest tamil news


உத்தவ் தாக்கரேயின் மனைவி ரேஷ்மி தாக்கரே, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் மனைவிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் உங்கள் கணவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் சிவசேனாவுக்கு அழைத்து வாருங்கள் எனக்கூறி வருகிறார்.

இதனிடையே, சஞ்சய் ராவத் வெளியிட்ட அறிக்கையில், இன்னும் எத்தனை நாட்களுக்கு பதுங்கி இருக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், 16 எம்.எல்.ஏ.,க்களுக்கு துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதை மேற்கோள் காட்டியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-202217:31:03 IST Report Abuse
 Venugopal S ஆஹா,ஆளுநருக்குத் தான் சிவசேனா எம்எல்ஏக்கள் மீது எவ்வளவு பாசம், அக்கறை, அன்பு?
Rate this:
Cancel
Thirumal s S - Gulbarga,இந்தியா
26-ஜூன்-202218:43:43 IST Report Abuse
Thirumal s S ,,,,
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
26-ஜூன்-202218:14:38 IST Report Abuse
Rafi மக்களை சந்தித்து வெற்றிபெற முடியாதவர்கள் கையாளும் கோழைத்தனங்கள். எப்படியாவது ஆட்சி பதவியில் இருக்க வேண்டும் அதற்காக நாகரீகம் தேவையில்லை என்ற நிலையில் கீழிரங்கி செல்வது ஜனநாயக நாட்டின் அவமானம்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
26-ஜூன்-202218:34:50 IST Report Abuse
sankarஉத்தவ் மட்டும் என்ன வாழுதாம் - பதவிக்காக எதிராளியிடம் சரணடைந்து துரோகத்தின் மூலம்தான் ஆட்சிக்கு வந்தார் - நீ சவுதியில் ஒழுங்கா வேலையே பாரு - இந்த வேலை உனக்கு வேண்டாம்...
Rate this:
26-ஜூன்-202221:20:29 IST Report Abuse
பேசும் தமிழன்மக்களை சந்தித்து வெற்றி பெற முடியாதவர்கள் தான்.... பிஜெபி உடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற சிவசேனாவை கூட்டு சேர்ந்து கொண்டு ஆட்சி அமைத்தார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X