லோக்சபா இடைத்தேர்தல்: பக்வந்த் மான் தொகுதியில் ஆம் ஆத்மி படுதோல்வி

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து பக்வந்த் சிங் மான் ராஜினாமா செய்த லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று பஞ்சாப் ஆட்சியை பிடித்தது. அக்கட்சி சார்பில் பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்று கொண்டார். இதனையடுத்து அவர் சங்ரூர் லோக்சபா தொகுதி எம்.பி., பதவியை
AAP, Loses, BhagwantMann, Setback,  LokSabha, Bypoll, பஞ்சாப், இடைத்தேர்தல், ஆம் ஆத்மி, பக்வந்த் மான், முதல்வர், லோக்சபா, பாஜ, காங்கிரஸ், தோல்வி, வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து பக்வந்த் சிங் மான் ராஜினாமா செய்த லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று பஞ்சாப் ஆட்சியை பிடித்தது. அக்கட்சி சார்பில் பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்று கொண்டார். இதனையடுத்து அவர் சங்ரூர் லோக்சபா தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதில், ஆளும் ஆம் ஆத்மி சார்பில் குருமயில் சிங், காங்கிரஸ் சார்பில் தல்விர் சிங், பா.ஜ.,வின் கெவல் தில்லன், அகாலி தளத்தின் கமல்தீப் கவுர் ராஜோனா, சிரோண்மணி அகாலி தளம்(அமிர்தசரஸ்) என்ற மற்றொரு கட்சியின் சிம்ரன்ஜித் சிங் மன் ஆகியோர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜூன்26)நடந்தது.


latest tamil news


அதில், சிம்ரஜ்ன்ஜித் சிங் மன் 5,800 ஓட்டுக்கும் மேல் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். 2வது இடத்தை ஆம் ஆத்மி, 3வது இடத்தை காங்கிரஸ், 4வது இடத்தை பா.ஜ., வேட்பாளரும், 5வது இடத்தை அகாலிதளமும் பெற்றது. இந்த தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருந்தது. சங்ரூர் தொகுதியில், 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் பக்வந்த் மான் 2.20 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் 1.10 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தார். ஆட்சி அமைந்து 4 மாதம் கூட நிறைவு பெறாத நிலையில், முதல்வர் ராஜினாமா செய்த தொகுதியில் தோல்வியை சந்தித்தது ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202219:29:03 IST Report Abuse
K.R.Prem Kumar Bangalore Any agitation against BJP by opposition parties, particularly Congress, that too during any bye election time, is only an advantage and help to BJP, as voters utilising the chance to show their angry against such agitation and to teach opposition parties by giving big win to BJP and adding its strength both in Lok Sabha and State assemblies.
Rate this:
Cancel
undu urangi sezhitthu - ariyalur,இந்தியா
26-ஜூன்-202217:58:15 IST Report Abuse
undu urangi sezhitthu சீக்கியர்களுக்கு ரொம்பதான் தெளிவு
Rate this:
27-ஜூன்-202215:24:43 IST Report Abuse
ஆரூர் ரங்வென்றவர் பிந்தரன்வாலே ஆதரவாளர்.😡 பயங்கரவாதத்தை எதிர்த்தது கிடையாது .மகிழ முடியுமா?...
Rate this:
Cancel
jysen - Madurai,இந்தியா
26-ஜூன்-202217:22:19 IST Report Abuse
jysen Fools. Though they are the ruling party the App don't know how to win a by election. High time the App adapted the diravida model to win elections.
Rate this:
Sriniv - India,இந்தியா
26-ஜூன்-202218:06:54 IST Report Abuse
SrinivThe point to see is that BJP has finished 4th. People are fed up of empty promises....
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
26-ஜூன்-202219:14:52 IST Report Abuse
madhavan rajan,,,,...
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
26-ஜூன்-202220:37:20 IST Report Abuse
Shekarபிஜேபி அங்கு எப்போதும் இருந்ததில்லையே. பிறகு எப்படி முடிந்துவிட்டது என்று சொல்லமுடியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X