ரஷ்ய தங்கத்துக்கும் தடை போடுகிறது ஜி7 நாடுகள்: 90% ஏற்றுமதி பாதிக்கும்

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா சுமத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய ஜி7 நாடுகள் தடை விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (ஜூன் 26) அறிவித்தார்.உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவியதிலிருந்து கடும் பொருளாதார அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறது. ரஷ்ய வங்கிகள், எரிசக்தி நிறுவனங்கள்,
ரஷ்ய தங்கத்துக்கும் தடை போடுகிறது ஜி7 நாடுகள்: 90% ஏற்றுமதி பாதிக்கும்

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா சுமத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய ஜி7 நாடுகள் தடை விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (ஜூன் 26) அறிவித்தார்.

உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவியதிலிருந்து கடும் பொருளாதார அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறது. ரஷ்ய வங்கிகள், எரிசக்தி நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், உயர் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் உள்ளன. இந்நிலையில் ரஷ்யாவின் தங்கத்திற்கும் தடை விழப் போகிறது. 2020ல் ரஷ்யாவின் உற்பத்தியில் 90 சதவீதம் ஜி7 நாடுகளுக்கு தான் சென்றது. அதிலும் குறிப்பாக பிரிட்டன் தான் ரஷ்ய தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்தது. அந்த பாதயையும் ஜி7 மூலம் அமெரிக்கா மூட உள்ளது.


latest tamil news


இது பற்றி அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது: கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற எரிசக்திகளுக்கு பிறகு ரஷ்யாவிற்கு இரண்டாவது பெரிய ஏற்றுமதியாக தங்கம் உள்ளது. ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரம் அது. இந்நிலையில் அதன் ஏற்றுமதியை தடுப்பது உலகப் பொருளதாரத்திலிருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தும்.



2021ல் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் ரஷ்ய பொருளாதாரத்திற்கு நெருக்கடி காலத்தில் புகலிடப் பொருளாக அமைந்தது. பொருளாதார தடைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் சொத்துக்களை தங்கமாக மாற்றி வருவதாக நம்பப்படுகிறது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக அனைத்து தடைகளும் சேர்ந்து ரஷ்யாவின் பொருளாதாரத்தை ஆழமாக பாதிக்கும். அது மெதுவாக ஆனால் நிச்சயமாக நடக்கும் என்கின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202221:14:01 IST Report Abuse
அப்புசாமி ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X