ஊருக்குள் மீண்டும் கரடி வந்ததால் மக்கள் அச்சம்

Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, ஊருக்குள் மீண்டும் கரடி வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே நியூசிகர்ணப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மகாதேவன், 55. விவசாயி. இவர் வீட்டு முன்பு கன்றுக்குட்டியை கட்டி வைத்திருந்தார். கடந்த 24 ம் தேதி அதிகாலை அவரது கன்றுக்குட்டி கழுத்தறுபட்டு இறந்து கிடந்தது. கால்நடை மருத்துவர்கள் நடத்திய பிரேத
ஊருக்குள் மீண்டும் கரடி வந்ததால் மக்கள் அச்சம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, ஊருக்குள் மீண்டும் கரடி வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே நியூசிகர்ணப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மகாதேவன், 55. விவசாயி. இவர் வீட்டு முன்பு கன்றுக்குட்டியை கட்டி வைத்திருந்தார். கடந்த 24 ம் தேதி அதிகாலை அவரது கன்றுக்குட்டி கழுத்தறுபட்டு இறந்து கிடந்தது. கால்நடை மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில் கரடி கடித்து கன்றுக்குட்டி இறந்தது தெரியவந்தது.

இந்நிலையில் வாணியம்பாடி அருகே, வடக்குப்பட்டு, சின்னப்பள்ளி, அம்பலுார், எக்லாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் கரடி சுற்றிக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது. வாணியம்பாடி வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், ஆந்திரா மாநிலம், குப்பம் வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க வந்த கரடி ஒன்று திரும்பிச் செல்ல வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் தனியாக மக்கள் சுற்ற வேண்டாம், கால்நடைகளை வீட்டுக்கு வெளியே கட்டி வைத்திருக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X