இது என்ன ஏலியனா? - வைரலாகும் வீடியோ..!| Dinamalar

இது என்ன ஏலியனா? - வைரலாகும் வீடியோ..!

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | |
படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது கிடைத்த வித்தியாசமான மீன் ஒன்றை, இளைஞர் ஒருவர் கையில் பிடித்துக் கொண்டு இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள், இது ஏலியனா என கேட்டு கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அது என்ன மீன் என்பதை தற்போது பார்க்கலாம்.அந்த மீனின் பெயர் கணவாய் மீன். கணவாய் மீன் என்றால் நம்மில்
Squid Fish, கணவாய் மீன், வெட்டு மீன், Cuttle Fish, செபிடா மீன், Sepiida fish, மீன், வைரல் வீடியோ, viral video, video, dinamalar, dinamalar daily, News, Paper,

படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது கிடைத்த வித்தியாசமான மீன் ஒன்றை, இளைஞர் ஒருவர் கையில் பிடித்துக் கொண்டு இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள், இது ஏலியனா என கேட்டு கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அது என்ன மீன் என்பதை தற்போது பார்க்கலாம்.



latest tamil news



அந்த மீனின் பெயர் கணவாய் மீன். கணவாய் மீன் என்றால் நம்மில் பலரும் ஒரு உணவு பொருளாக தான் அறிந்து இருப்போம். கணவாய் மீனில் மூன்று வகைகள் உள்ளன. அவை கணவாய் மீன்(Squid Fish), வெட்டு மீன் (Cuttle Fish), செபிடா மீன் (Sepiida fish) ஆகியவை தான். இவை அனைத்தும் செபலோபோடா (sepalopoda) வகையை சேர்ந்தவை.



latest tamil news



இந்த வகை மீன்கள், பொதுவாக 15 முதல் 25 செ.மீ வரை வளரக்கூடியவை. இதில் ஒரு வெட்டு மீனின் சராசரி ஆயுட்காலம் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும். முதுகெலும்பு இல்லாத இந்த மீன் மிகவும் புத்திசாலியான மீன் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


இவ்வகை மீன்களை டால்பின், சுறா போன்ற மீன்கள் வேட்டையாடுவதற்கு துரத்தும் போது, உடலில் இருந்து நிற சாயத்தை வெளியிட்டு விட்டு தப்பிச்செல்லக் கூடியவை. இதில் பெரிய கணவாய் மீன்கள் கருப்பு நிற சாயத்தை வெளியிடும், சிறிய மற்றும் ஊசி கணவாய் மீன்கள் நீல நிற சாயத்தை வெளியிடும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X