உ.பி.,யில் 2 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி: அகிலேஷூக்கு பின்னடைவு

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி: உ.பி.,யில் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் மற்றும் அசன்கான் ராஜினாமா செய்த தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.பஞ்சாப்பில் 1 மற்றும் உ.பி.,யில் 2 தொகுதிகளுக்கும், டில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. உ.பி.,யில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அசம்கார்க் தொகுதி எம்.பி., பதவியை
BJP,Bharatiya Janata Party,Uttar Pradesh,உத்தரபிரதேசம்,பா.ஜ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: உ.பி.,யில் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் மற்றும் அசன்கான் ராஜினாமா செய்த தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

பஞ்சாப்பில் 1 மற்றும் உ.பி.,யில் 2 தொகுதிகளுக்கும், டில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. உ.பி.,யில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அசம்கார்க் தொகுதி எம்.பி., பதவியை அகிலேஷூம், ராம்கார்க் தொகுதியை அசம்கானும் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து கடந்த 23ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடந்தது.


latest tamil news




அதில், இரண்டு தொகுதிகளையும் அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ., கைப்பற்றியது. ராம்பூரில் பா.ஜ., வேட்பாளர் கன்ஷியாம் லோதி 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அசம்கார்க் தொகுதியில் பா.ஜ., வின் தினேஷ் லால் யாதவ் வெற்றி பெற்றார். இது சமாஜ்வாதி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


சட்டசபை தேர்தல்



திரிபுரா மாநிலத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளை பா.ஜ.,வும், ஒரு தொகுதியை காங்கிரசும் கைப்பற்றியது. பர்டோவாலி தொகுதியில் முதல்வர் மாணிக் சகா வெற்றி பெற்று பதவியை தக்க வைத்து கொண்டார்.

டில்லியில் ராஜிவ் சதா, ராஜ்யசபா எம்.பி.,யாக வெற்றி பெற்றதால், அவர் ராஜினாமா செய்த ராஜிந்தர் நகர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆம் ஆத்மியின் துர்கேஷ் பதக் 11 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு 40,319 ஓட்டுகள் கிடைத்தது. எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ராஜேஷ் பாட்டியாவுக்கு 28,851 ஓட்டுகள் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளருக்கு 2,014 ஓட்டுகள் மட்டும் கிடைத்தது.

ஆந்திராவில் அமைச்சராக இருந்த மேகபதி கவுதம் ரெட்டி காலமானதை தொடர்ந்து, அட்மகுர் தொகுதிக்கு நடந்த தேர்தலில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவரது சகோதரர் விக்ரம் ரெட்டி வெற்றி பெற்றார்.

ஜார்க்கண்டில் மண்டர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-202217:27:15 IST Report Abuse
Venugopal S இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறாவிட்டால் தான் அது ஆச்சரியம் மற்றும் செய்தி.
Rate this:
Cancel
27-ஜூன்-202211:31:02 IST Report Abuse
ஆரூர் ரங் அகிலேஷ் தலையில் கைவைத்திருக்கும் போட்டோ சாலப்😉😉 பொருத்தம்
Rate this:
Cancel
s. mohan -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-202207:06:58 IST Report Abuse
s. mohan இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் என்னதான் மேடையில் பி ஜெ பி பற்றியும், மோடியை பற்றியும் அவதூறு பேசினாலும் "மக்கள் மனதில் நிற்ப்பவர் யார் " என்ற பாட்டுந்தான் நினைவுக்கு வருகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X