அகஸ்தீஸ்வரர் கோவிலில் திருட்டு

Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
வாலாஜாபேட்டை:வாலாஜாபேட்டை அருகே, அகஸ்தீரஸ்வரர் கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே வன்னிவேடு பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று இரவு 8:00 மணிக்கு குருக்கள் மனோஜ், 55, கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை 6:00 மணிக்கு வந்த போது,
அகஸ்தீஸ்வரர் கோவிலில் திருட்டு

வாலாஜாபேட்டை:வாலாஜாபேட்டை அருகே, அகஸ்தீரஸ்வரர் கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே வன்னிவேடு பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று இரவு 8:00 மணிக்கு குருக்கள் மனோஜ், 55, கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை 6:00 மணிக்கு வந்த போது, கோவில் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.உள்ளே சென்று பார்த்தில், கருவறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பித்தளை குத்து விளக்குகள், சொம்புகள், குடங்கள், தங்க மாலை, கேமரா போன்ற பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.ஷடாரண்ய தலங்களில் மிக முக்கியமானதாக விளங்கும் இந்த கோவிலில் ஞாயிறு தோறும் சரபேஸ்வரர் வழிபாடு நடக்கும். இதில் 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். கோவிலில் திருட்டு போனதால் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.தற்போது ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுமன பணிகள் நடந்து கொண்டுள்ளது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் 10 க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்களிடம் வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
26-ஜூன்-202221:54:29 IST Report Abuse
GANESUN சரி..சரி.. கட்டட தொழிலாளிகள்ல இருந்து 2பீடாவாயன்கள அரஸ்ட் பண்னா போச்சு..
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-ஜூன்-202219:46:03 IST Report Abuse
Bhaskaran அறக்கொள்ளைத்துரைகு ஆபத்து போலிருக்கு
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-ஜூன்-202218:52:34 IST Report Abuse
Ramesh Sargam முன்பெல்லாம் கோவில் வருமானங்களை நேரடியாக திருடினார்கள். அதற்கு எதிர்ப்பு அதிகம் வரவே, இப்ப இப்ப இரவில் கோவில் பீரோக்களை உடைத்து திருட ஆரம்பித்துவிட்டனர். யாராக இருக்கும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X