ஒலகாசி சிவன் கோவிலில் நந்தி சிலை சேதம்

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
குடியாத்தம்:ஒலகாசி சிவன் கோவிலில் நந்திசிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஒலகாசி பகுதியில் பாலாற்றங்கரையோரம் விசாலாட்சி சமேத ஒலகாசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்
ஒலகாசி சிவன் கோவிலில் நந்தி சிலை சேதம்

குடியாத்தம்:ஒலகாசி சிவன் கோவிலில் நந்திசிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஒலகாசி பகுதியில் பாலாற்றங்கரையோரம் விசாலாட்சி சமேத ஒலகாசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கோவில் முன்பு உள்ள நந்தி சிலையை சேதப்படுத்தியுள்ளனர்.
பிரதோஷாசத்திற்காக நேற்று நந்தி சிலையை சுத்தம் செய்ய பணியாளர்கள் வந்த போது சிலை சேதப்படுத்தப்பட்டது தெரியவந்துது. கோவில் ஆய்வாளர் பாரி கொடுத்த புகார்படி குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். நந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்து முன்னணி வேலுார் கோட்டத் தலைவர் மகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202221:16:31 IST Report Abuse
சி சொர்ணரதி தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது.கோயில் சிலைகள் சேதப் படுத்துவது தொடர்கிறது.விடியல் ஆட்சியில் இந்து கோயில்களுக்கு பாதுகாப்பில்லை.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
27-ஜூன்-202201:13:03 IST Report Abuse
Barakat Aliவிடியல் ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பில்லை ................
Rate this:
sridhar - Chennai,இந்தியா
27-ஜூன்-202204:58:42 IST Report Abuse
sridharஇதுவும் மனநிலை சரி இல்லாதவர் செய்தது என்று சொல்லி முடித்து விடுவார்கள் . அவ்வளவு தான் . மன நிலை சரி இல்லாதவர்கள் ஆட்சி நடக்குது....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-ஜூன்-202220:32:54 IST Report Abuse
Ramesh Sargam சிலையை சேதப்படுத்தியவன் காலை மாடு (நந்தி) முட்டி இறப்பான். அது நிச்சயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X