முன்னேற்றம், வளர்ச்சி, கனவுகளை நிறைவேற்ற இந்தியா தயாராகி வருகிறது: முனீச் நகரில் பிரதமர் உரை

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
முனீச்: இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது. என ஜெர்மனி தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாடினார். ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய ஜனநாயக வரலாற்றில் அவரசநிலை ஒரு கரும்புள்ளி.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

முனீச்: இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது. என ஜெர்மனி தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாடினார்.latest tamil newsஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய ஜனநாயக வரலாற்றில் அவரசநிலை ஒரு கரும்புள்ளி. கலாச்சாரம், உணவு,. உடை, பன்முகத்தன்மை உள்ளிட்டவை நமது ஜனநாயகத்தை துடிப்பானதாக்குகிறது. தற்போது 4வது தொழிற்புரட்சியில் பின்தங்காமல் இந்தியா உலகையே வழிநடத்தி வருகிறது. 90 சதவீதத்தினர் கொரோனா இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

99 சதவீத கிராமங்களில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். பருவநிலை மாற்றம் என்பது இந்தியாவின் கொள்கைகள் மட்டுமல்லாது நிலையான காலநிலை நடைமுறைகள் இந்திய மக்களின் வாழக்கையின் ஒரு அங்கமாகி விட்டன. நாட்டை தூய்மையாக வைத்திருப்பது தங்கள் கடமை என மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர்.


latest tamil newsகனவுகளை நிறைவேற்ற இந்தியா தயார்


இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது. பெட்ரோலில் 10 சதவீதம் அளவிற்கு எத்தனாலை கலப்பது என்பதை இலக்காக வைத்திருந்தோம் அதனை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே அடைந்து விட்டோம். இவ்வாறு அவர் உரையாடினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
27-ஜூன்-202200:03:39 IST Report Abuse
Aarkay எந்த குறிப்பகளும், காகிதங்களை கையிலில்லாமல், சரளமாய், உண்மைகளை, புள்ளிவிவரங்களை புட்டுப்புட்டு வைத்தார் நம் பிரதமர். மூளைச்சலவை செய்யப்பட்ட டாஸ்மாக் உபிக்களுக்கு இதெல்லாம் புரிய வாய்ப்பேயில்லை.
Rate this:
Yokiyan - Madurai,இந்தியா
28-ஜூன்-202212:16:47 IST Report Abuse
Yokiyanசரளமாய் வடை சுடுவதில் அவர் வல்லவர்...
Rate this:
Cancel
26-ஜூன்-202221:08:51 IST Report Abuse
அப்புசாமி ,,,,
Rate this:
Cancel
26-ஜூன்-202220:57:15 IST Report Abuse
அப்புசாமி 40 கோடியா இருந்த ஏழைகளை 80 கோடியாக்கி சாதனை புரிஞ்சு எல்லோருக்கும் ரேஷன் குடுக்குறோம். நுணலும் தன் வாயால் கெடும்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
27-ஜூன்-202200:01:54 IST Report Abuse
Aarkayஹவாலா ஏழையாம் நம்பிட்டோம்...
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
27-ஜூன்-202201:38:53 IST Report Abuse
Barakat Aliபொறுப்பின்றி மக்கள் பெற்றுத் தள்ளினால் ஏழைகள் இரண்டு மடங்காக ஆவதில் என்ன அதிசயம் ???? .......... துருப்பிடித்த மூளையை வைத்துக்கொண்டு உளறக்கூடாது .........
Rate this:
Yokiyan - Madurai,இந்தியா
28-ஜூன்-202212:01:38 IST Report Abuse
Yokiyanநீங்க குடுக்குற முட்டு ரொம்ப கேவலமா இருக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X