எகிறியது முட்டை விலை பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜூன் 1ல், 4.80 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு முட்டையின் கொள்முதல் விலை, நேற்று முன்தினம், 5.35 ரூபாயாக உயர்ந்தது. நேற்றும், 15 காசு அதிகரித்து, 5.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இது குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறியதாவது:கொள்முதல் விலை உயர்ந்து வந்தாலும், அதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



latest tamil news



ஜூன் 1ல், 4.80 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு முட்டையின் கொள்முதல் விலை, நேற்று முன்தினம், 5.35 ரூபாயாக உயர்ந்தது. நேற்றும், 15 காசு அதிகரித்து, 5.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இது குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறியதாவது:

கொள்முதல் விலை உயர்ந்து வந்தாலும், அதில் இருந்து, 30 காசு வரை குறைத்து விற்பனை செய்ய, 'நெஸ்பேக்' பரிந்துரை செய்கிறது. அதனால் பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.இருந்தும் தற்போதைய சூழ்நிலையில், உற்பத்தி சரிந்துள்ளதாலும், வட மாநிலங்களில் உயர்ந்து வருவதாலும், நாமக்கல் மண்டலத்திலும் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.


latest tamil news



முட்டை வரலாற்றில், 5.50 ரூபாய் என்பது உச்சபட்ச விலை. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அப்போது தான் பண்ணையாளர்களக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202221:43:30 IST Report Abuse
அப்புசாமி பண்ணையாளர்களுக்கு லாபம். மக்களுக்கு நஷ்டம். அடுத்தது முட்டை மசோதா தான் இலக்கு.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
27-ஜூன்-202205:53:06 IST Report Abuse
Sanny அப்பு அதென்னவோ தெரியவில்லை. வெங்காயமும், தக்காளியும் விலை எகுறும்போது எல்லோருமே துள்ளி குதிக்கிறாங்க. பாராளுமன்றில்ம் எதிரொலிக்குது....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-ஜூன்-202221:37:33 IST Report Abuse
Ramesh Sargam கோழிக்கு தெரியுமா தான் போட்ட முட்டை விலை இப்படி எகிறி இருப்பது. போகட்டும், அப்ப கோழியின் விளையும் எகிறும்? அதுவும் கோழிக்கு தெரியவா போகுது.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
27-ஜூன்-202205:50:13 IST Report Abuse
Sanny சாப்பிடுறவனுக்குத்தான் தெரியுமுங்க. கோழிக்கு என்ன பாங்கில் டெபொசிடா இருக்கு. லொள்ளு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X