வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற நெருக்கடி, முதல்வர் ஸ்டாலினுக்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் வாயிலாக உருவாகி உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
![]()
|
முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேக ராவ், யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி, திரவுபதி முர்முவை ஆதரிக்கிறார். பீஹாரில் தலித் சமுதாயத்தினர் மீது, கொலை வெறித்தாக்குதல் நடத்திய, உயர் ஜாதி அமைப்புக்கு ஆதரவாக, யஷ்வந்த் சின்ஹா குரல் கொடுத்தவர் என்பதால், திரவுபதி முர்முவை தி.மு.க., ஆதரிக்க வேண்டும் என, தமிழகத்தை சேர்ந்த சில தலித் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
'சமூக நீதி, திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் தி.மு.க., பழங்குடியின சமுதாயத்திற்கு எதிராக செயல்படுவதா' என்ற கேள்வியையும் கேட்டு, சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கின்றனர்.இதனால், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை ஆதரிக்கும் முடிவில், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.
இந்நிலையில், மோடி தலைமையிலான அரசில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர்களுடன் நெருக்கமாக வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய தி.மு.க., மூத்த எம்.பி.,யாக வலம் வருபவருமான ஒருவரும், மற்ற சில தி.மு.க., - எம்.பி.,க்களும், பா.ஜ., வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என, திடீரென முதல்வரை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
![]()
|
ஆனால், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா, அமைச்சர் துரைமுருகன் ஆகியோர், யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.ஆனாலும், யாருக்கு ஆதரவு என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் அதிகாரப்பூர்வாக அறிவிக்க வேண்டும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement