அனுமதியின்றி வெட்டப்பட்ட பனை மரங்கள்:நில உரிமையாளரிடம் விசாரணை

Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
ஆனைமலை:ஆனைமலை தாலுகாவில், இரு இடங்களில் அனுமதியின்றி, 40க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது குறித்து வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.ஆனைமலை, மக்கள் சக்தி நகர் அருகே தனியார் பட்டா நிலத்தில், நேற்று, 40க்கும் மேற்பட்ட பனை மரங்களை வருவாய்த்துறையின் அனுமதி பெறாமல் நிலத்தின் உரிமையாளர் வெட்டி வீழ்த்தியுள்ளார்.இதையடுத்து, அப்பகுதி மக்கள் வருவாய்த்துறைக்கு புகார்
அனுமதியின்றி வெட்டப்பட்ட பனை மரங்கள்:நில உரிமையாளரிடம் விசாரணை

ஆனைமலை:ஆனைமலை தாலுகாவில், இரு இடங்களில் அனுமதியின்றி, 40க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது குறித்து வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.ஆனைமலை, மக்கள் சக்தி நகர் அருகே தனியார் பட்டா நிலத்தில், நேற்று, 40க்கும் மேற்பட்ட பனை மரங்களை வருவாய்த்துறையின் அனுமதி பெறாமல் நிலத்தின் உரிமையாளர் வெட்டி வீழ்த்தியுள்ளார்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் வருவாய்த்துறைக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை வருவாய் ஆய்வாளர் கற்பகவள்ளி சம்பவம் குறித்து விசாரித்தார்.இதேபோல், ஆழியாறு பூங்காவுக்கு எதிரே, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 7வது வணிகக்கடைக்கு பின்பக்கமுள்ள பழமையான நாவல் மரத்தை, கடை உரிமையாளர் வெட்டி அகற்றியுள்ளார். இரண்டு சம்பவங்கள் குறித்தும் வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.ஆனைமலை தாசில்தார் பானுமதி கூறுகையில், ''மக்கள் சக்தி நகர் அருகே பட்டா நிலத்தின் உரிமையாளர், உரிய அனுமதி பெறாமல், பனை மரங்களை வெட்டியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும். மரங்கள் வெட்டிய சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது,'' என்றார்.
பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் அக்பர்அலி கூறுகையில், ''ஆழியாறில் கடையை ஏலத்தில் எடுத்த சத்யன், கடந்த, 19ம் தேதி கடையின் மீது மரம் விழுவதாக தகவல் தெரிவித்தார். ஆபத்தான கிளைகளை அகற்ற வாய்மொழியாக உத்தரவு கொடுத்த நிலையில், அனுமதியின்றி முழு மரத்தையும் அகற்றியுள்ளனர். இத்தகவலை வருவாய்த்துறையிலும் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X