சோலையாறு நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
வால்பாறை:சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த மே மாதம், 31ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. காற்றுடன் பரவலாக மழை பெய்வதால், சில இடங்களில் மரம் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, தொடர்ந்து பெய்த கனமழையினால், மக்களின் இயல்பு
சோலையாறு நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வால்பாறை:சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த மே மாதம், 31ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. காற்றுடன் பரவலாக மழை பெய்வதால், சில இடங்களில் மரம் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, தொடர்ந்து பெய்த கனமழையினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.பருவமழையால், மேல்நீராறு, கீழ்நீராறு அணையிலிருந்து சோலையாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.தொடர் மழையினால் மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 402 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து, 79 கனஅடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 104.87 அடியாக இருந்தது.சோலையாறு மட்டுமின்றி அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 21, பரம்பிக்குளம் - 8, வால்பாறை - 15, மேல்நீராறு - 48, கீழ்நீராறு - 21, பெருவாரிப்பள்ளம் - 11, துாணக்கடவு - 5, காடம்பாறை - 8, ஆழியாறு - 2, மேல்ஆழியாறு - 6, மணக்கடவு - 12, பொள்ளாச்சி - 11 என்ற அளவில் மழை பெய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X