அதிருப்தியாளர்களுக்கு சிவசேனா எச்சரிக்கை; அமைச்சர்களின் பதவிகளை பறிக்க முடிவு

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
மும்பை-மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், மேலும் ஒரு மாநில அமைச்சர், அதிருப்தியாளர்களுடன் இணைந்துள்ளார். அதிருப்தியாளர்கள் குழுவில் உள்ள ஏக்னாத் ஷிண்டே உட்பட, ஒன்பது அமைச்சர்களின் பதவிகளையும் பறிக்கப் போவதாக சிவசேனா எச்சரித்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை-மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், மேலும் ஒரு மாநில அமைச்சர், அதிருப்தியாளர்களுடன் இணைந்துள்ளார்.latest tamil newsஅதிருப்தியாளர்கள் குழுவில் உள்ள ஏக்னாத் ஷிண்டே உட்பட, ஒன்பது அமைச்சர்களின் பதவிகளையும் பறிக்கப் போவதாக சிவசேனா எச்சரித்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது.

சிவசேனா மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே தலைமையில் பல எம்.எல்.ஏ.,க்கள் கட்சிக்கு எதிராக போர்க் கொடி துாக்கியுள்ளனர்.குஜராத்தின் சூரத் நகருக்கு சென்ற அதிருப்தியாளர்கள், தற்போது, அசாமின் கவுஹாத்தியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். கட்சியின், 55 எம்.எல்.ஏ.,க்களில், 40 பேர் தங்களுக்கு ஆதரவாக உள்ள தாக, அதிருப்தியாளர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனால் உத்தவ் தாக்கரே அரசு எந்த நேரத்திலும் கவிழும் என்ற நிலை ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக இரு தரப்பும் மாறி மாறி பரஸ்பரம் குற்றஞ் சாட்டி வருகின்றன. இந்நிலையில், உதய் சமந்த் என்ற அமைச்சரும், கவுஹாத்திக்குச் சென்று அதிருப்தியாளர்களுடன் நேற்று இணைந்துள்ளார்.அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் அளித்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏக்னாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் குழுவில் உள்ள ஒன்பது அமைச்சர்களிடம் இருந்து பொறுப்புகளை பறிப்பது குறித்து உத்தவ் தாக்கரே ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, மஹாராஷ்டிராவில் உள்ள வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்துள்ள தால், அதிருப்தியாளர்கள் குழுவில் உள்ள, 15 எம்.எல்.ஏ.,க்களுக்கு, 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு வழங்க மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்.


மிரட்டல்

முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும், மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே, மும்பையில் நேற்று நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசியதாவது:கட்சியிலும், ஆட்சியிலும் ஏக்னாத் ஷிண்டே உள்ளிட்டோருக்கு நல்ல மரியாதை கொடுத்தோம். பிரச்னை இருந்தால், இங்கேயே போராடியிருக்க வேண்டும். வேறொரு மாநிலத்துக்கு சென்று பதுங்கியுள்ளனர்.இந்த அதிருப்தியாளர்கள், மிகப் பெரிதாக ஏதோ எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் கதவு மூடப்பட்டு விட்டது. அவர்களுக்கு தைரியம் இருந்தால், மும்பைக்கு வந்து எங்களை சந்திக்கட்டும்.

மீண்டும் தேர்தலை அவர்கள் சந்திக்கும்போது, அவர்களுக்கு தோல்வி கிடைப்பதை நாம் உறுதி செய்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையே, கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சமூக வலை தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், 'இன்னும் எத்தனை நாள் தான் கவுஹாத்தியில் பதுங்கியிருப்பீர்கள். மும்பைக்கு எப்படியும் வந்துதானே ஆக வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ராவ்சாகேப் தான்வே, ''தற்போதுள்ள சூழ்நிலைக்கு பா.ஜ., எந்த விதத்திலும் காரணமில்லை. அடுத்த, இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த அரசு கவிழ்ந்து விடும். இனி நாங்கள் எதிர்க்கட்சிகள் வரிசையில் இருக்க மாட்டோம்,'' என, குறிப்பிட்டுள்ளார்.latest tamil newsபரபரப்பு

இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று மும்பை வருவதாக தகவல் பரவியதை அடுத்து, விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அசாம் மாநில பா.ஜ., அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் நேற்று சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று சந்தித்துப் பேசினர்.இதற்கிடையே, தங்களை பதவி நீக்கம் செய்வது குறித்து துணை சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஏக்னாத் ஷிண்டேயும், அவரது ஆதரவாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-ஜூன்-202214:11:26 IST Report Abuse
Sridhar எதற்கும் உதவாத இந்த தாக்கரேயை உடனடியாக டிஸ்மிஸ் செய்யும் நேரம் வந்துவிட்டது. பிஜேபியும் ஷிண்டே தலைமையிலான உண்மையான சிவசேனையினரும் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும்போது, மொத்தம் உள்ள 288 இடங்களில் 250 கு மேல் வென்றுவிடுவார்கள். மேலும் BMC எனப்படும் மும்பை கார்பொரேஷன் தேர்தல் வருகிறது. பொதுத்தேர்தலுக்கு நல்ல ஒரு முன்னோடியாக அது அமையும். மகாராஷ்டிரத்தில் உதவா தாக்கரே மொத்தமாக ஒதுக்கப்படுவார் என்பதில் சந்தேகமே இல்லை. ஹ்ம்ம் மகாராஷ்டிரா மக்களுக்கு இந்த நல்ல விஷயம் நடக்க 2 1 /2 ஆண்டுகள் ஆயிருக்கு. உதவா தாக்கரே குடும்பத்தினரின் பேச்சுக்களையும் ரௌடியதனத்தையும் வைத்து பார்க்கும்போது, நியாயத்தை விரும்புவோருக்கு ஏன் போர்க்கொடி பிடிக்க இவ்வளவு காலம் ஆயிற்று என்று புரிந்துகொள்ளமுடிகிறது. மக்கள் ஒரு கட்டத்தை தாண்டியிருக்கிறார்கள். இன்னும் பல இருக்கிறது. ஆர்வத்தில் எல்லாமே இன்றே நடக்கவேண்டும் என்று நாம் ஆசைப்பட்டாலும், நிதானமாகத்தான் ஒவ்வொன்றாக கடக்கவேண்டும்.
Rate this:
Cancel
27-ஜூன்-202211:26:08 IST Report Abuse
ஆரூர் ரங் எல்லா MLA மந்திரிகளும் போயாச்சு. ரெண்டே ரெண்டு MLC மட்டுமே பாக்கி. இன்னும் பவார் தரும்😛 தைரியத்தில் ஆட்டம் ஆடுகிறார் உதவாக்கட்டை தாக்கரே .
Rate this:
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
27-ஜூன்-202214:04:09 IST Report Abuse
abdulrahim........
Rate this:
Cancel
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
27-ஜூன்-202208:46:09 IST Report Abuse
abdulrahim இது எல்லாத்துக்கும் பாஜக காரணமில்லையாமாம் ஆனால் அசாம் பாஜக அமைச்சர்கள் ரெண்டு பேர் ஹோட்டலில் போய் இந்த கறுப்பு ஆடுகளை பார்தாங்களாம்....
Rate this:
raja - Cotonou,பெனின்
27-ஜூன்-202211:11:03 IST Report Abuse
rajaகொள்கையில் மாறுபட்ட கட்சிகளிடம் பதிவுக்காக மக்கள் அளித்த தீர்ப்பை மீறி விலை போன கேடி உத்தவுக்கு இது சரியான பாடம் தான் ... கொதிக்காதே மூர்க்கா .......
Rate this:
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
27-ஜூன்-202214:00:18 IST Report Abuse
abdulrahimஉண்மையை பேசு???...
Rate this:
raja - Cotonou,பெனின்
27-ஜூன்-202215:23:57 IST Report Abuse
rajaஉண்மையை தான் சொல்றேன் மூர்க்கா.... மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்தது பிஜேபி-சிவசேனா கூட்டணியைத்தான்......பதவிக்காக வெற்றி பெற்றவுடன் கூட்டணி மாறியவன்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X