சர்வாதிகாரப்போக்கை முறியடித்த ஜனநாயகம்:'எமர்ஜென்சி' குறித்து பிரதமர் மோடி பேச்சு

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி,-''நம் நாட்டின் ஜனநாயகத்தை முறியடிக்க, 'எமர்ஜென்சி' காலத்தில் பெரும் முயற்சி நடந்தது. ஆனால், சர்வாதிகார மனப்பான்மையை ஜனநாயகம் முறியடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக நாம் விளங்குகிறோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். 'மன் கீ பாத்'பிரதமர் இந்திரா தலைமையிலான காங்., ஆட்சியின்போது, 1975 ஜூன் 25ம் தேதி, எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-''நம் நாட்டின் ஜனநாயகத்தை முறியடிக்க, 'எமர்ஜென்சி' காலத்தில் பெரும் முயற்சி நடந்தது. ஆனால், சர்வாதிகார மனப்பான்மையை ஜனநாயகம் முறியடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக நாம் விளங்குகிறோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.



latest tamil news



'மன் கீ பாத்'

பிரதமர் இந்திரா தலைமையிலான காங்., ஆட்சியின்போது, 1975 ஜூன் 25ம் தேதி, எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது; அது, 1977 மார்ச், 21ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது.எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, தன் மாதாந்திர ரேடியோ நிகழ்ச்சியான, 'மன் கீ பாத்'தில் குறிப்பிட்டு பேசினார். அவர் கூறியதாவது:நம் நாட்டில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது, வாழ்வதற்கான உரிமை, தனிமனித சுதந்திர உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. நீதிமன்றம், பத்திரிகை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளும் முடக்கப்பட்டன.



சிறந்த உதாரணம்

நம் நாட்டின் ஜனநாயகத்தை நசுக்க முயற்சி நடந்தது. பல்வேறு முயற்சிகள், ஆயிரக்கணக்கானோர் கைது, லட்சக்கணக்கானோர் மீது அத்துமீறல் நடந்தபோதும், இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர்.ஜனநாயகம் என்பது பல நுாற்றாண்டுகளாக, நம் ரத்தத்தில், நரம்பில் ஊறியுள்ளது. இறுதியில் ஜனநாயகம் வென்றது. ஜனநாயக முறைப்படி எமர்ஜென்சியை விலக்க வைத்து, ஜனநாயகத்தை நம் மக்கள் மீட்டனர்.ஜனநாயகத்தின் மூலம் சர்வாதிகார மனப்பான்மையை வெல்ல முடியும் என்பதற்கு இதைவிட உலகத்தில் சிறந்த உதாரணம் இருக்க முடியாது.இந்த ஜனநாயகப் போராட்டத்தில் பங்கேற்று, நேரடியாக பார்த்தவர்களில் நானும் ஒருவன். நாடு தற்போது, 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரத்தில், எமர்ஜென்சியின் இருண்ட பக்கங்கள் குறித்து இளைய தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.எதிர்கால சந்ததியினரும் அதை மறக்காமல் இருக்க செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.



வீரர்களுக்கு பாராட்டு

'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:தற்போது நம் நாடு மிக வேகமாக முன்னேறி வருகின்றது. நம் இளைஞர்கள் பெரும் வெற்றிகளை பெற்று வருகின்றனர்.'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து உள்ளது. விண்வெளி துறையிலும் தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அக்னிகுல், ஸ்கைரூட் ஆகிய தனியார் நிறுவனங்கள் ராக்கெட் செலுத்த தயாராகி வருகின்றன; இதைவிட பெருமை என்ன வேண்டும்.விளையாட்டிலும் நம் இளைஞரின் சாதனைகளை நினைத்துப் பார்க்கிறேன். பின்லாந்தில் நடந்த போட்டியில் ஈட்டி எறிதல் விளையாட்டில், மிகவும் கடினமான சூழ்நிலையிலும், நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், சமீபத்தில் ஓய்வை அறிவித்துள்ளார். அவர் மிகச் சிறந்த, அபாரமான வீராங்கனை மட்டுமல்ல, பலருக்கும் உந்துசக்தியாக விளங்குகிறார்.சமீபத்தில் நடந்த 'கேலோ இந்தியா' போட்டியில், நம் இளைஞர்கள் பெரிய சாதனைகளைப் புரிந்துள்ளனர். இந்தப் போட்டியில், 12 சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



அதில், 11 சாதனைகள் பெண்களால் செய்யப்பட்டுள்ளன.இதில் பங்கேற்ற பலர் மிக சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.ஸ்ரீநகரைச் சேர்ந்த ஆதில் அல்டாப், 70 கி.மீ., சைக்கிள் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். அவரது தந்தை டெய்லராக உள்ளார். சென்னையைச் சேர்ந்த தனுஷின் தந்தை கார்பெண்டராக பணியாற்றிய போதும், தன் மகனின் கனவுகளை நிறைவேற்றி வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-202211:22:41 IST Report Abuse
ஆரூர் ரங் அவசர நிலைக் காலத்தில் மோதி யின் சேவை. சிறையிலிருந்த தலைவர்களுக்கும் வெளியில் தலைமறைவாக இருந்த தலைவர்களுக்குமிடையே செய்தி எடுத்துச் செல்லும் ரகசியத் தூதுவராக இளைஞர் மோதி இருந்தார். இந்தத் தொடர்புதான் பின்னர் ஜனதாக் கட்சி🤔 உருவாகவும் இந்தியாவைத் தோற்றோடச் செய்யவும் உதவியது. இப்போது பலமான எதிர்கட்சிகள் நிலைக்க அதுதான் வழி கோலியது.
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-202211:05:03 IST Report Abuse
Venugopal S உங்கள் ஆட்சியும் கிட்டத்தட்ட எமர்ஜென்சி போன்ற நிலை தான். என்ன அப்போது தனி மனித சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிக்கப்பட்டது, இப்போது மாநிலங்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் மெதுவாக ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. அவ்வளவு தான் வித்யாசம் திரு மோடி அவர்களே!
Rate this:
27-ஜூன்-202215:20:36 IST Report Abuse
ஆரூர் ரங்சுதந்திரம் பறிக்கப்பட்டு இருந்தால் இப்படிக் கருத்து எழுத முடியுமா😡?எழுதுனாலும் வெளியிடக்கூட முடியாது . அவசர நிலைக் காலத்தில் துக்ளக், தினமணி எக்ஸ்ப்ரஸ் போன்றவை பல நாட்கள் வெளியிட முடியவில்லை. காரணம் முன் கூட்டியே சென்சார் அனுமதி கட்டாயமாக்கப்பட்டிருந்தது....
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
27-ஜூன்-202210:31:24 IST Report Abuse
J.Isaac பழைய புராணத்தை பாடி என்ன பிரயோஷனம். இப்படி எத்தனை காலங்கள் மக்களை ஏமாற்ற போகிறீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X