ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்ட தினம் 27 ஜூன் 1967

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 26, 2022 | |
Advertisement
ஏடிஎம் இயந்திரங்கள் என்பது இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் அத்தியவசியமான ஒன்றாகிவிட்டன. தேவைப்படும்போது ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இன்று யாரும் காசை கையில் வைத்துக் கொள்வதில்லை.ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்து இன்றுடன் 55ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் லண்டன், என்ஃபீல்டில் உள்ள பார்க்லேஸ் வங்கிக்
ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்ட தினம் 27 ஜூன் 1967

ஏடிஎம் இயந்திரங்கள் என்பது இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் அத்தியவசியமான ஒன்றாகிவிட்டன. தேவைப்படும்போது ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இன்று யாரும் காசை கையில் வைத்துக் கொள்வதில்லை.

ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்து இன்றுடன் 55ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் லண்டன், என்ஃபீல்டில் உள்ள பார்க்லேஸ் வங்கிக் கிளையில் நிறுவப்பட்டது. இயந்திரத்தின் பொன்விழாவிற்கு மரியாதை செய்யும் விதமாக, அந்த ஏடிஎம் இயந்திரம் தங்கத்தால் மாற்றப்பட்டுள்ளது.


ஆட்டோமேடட் டெல்லர் மெஷின் (Automated Teller Machine) என்று அழைக்கப்படும் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.ஏடிஎம் இயந்திரம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெபர்ட் பரோன் என்பவரால்கண்டுபிடிக்கப்பட்டது. பணம் போட்டால் சாக்லெட் கிடைப்பது போல், எந்த நேரத்திலும் பணத்தை எடுக்க ஒரு இயந்திரம் இருந்தால் எப்படி இருக்கும் என அவர் சிந்தனையில் உருவானது தான் ஏ.டி.எம்.

ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த பரோனிற்கும் லண்டன் பார்க்லேஸ் வங்கி கிளைக்கும் ஏற்பட்ட துரித ஒப்பந்தங்களால் பார்க்லேஸ் கிளையில் ஏடிஎம் இயந்திரம் தொடங்கப்பட்டது. அதன்பின் ஒன்பது நாட்களுக்கு பிறகு தனது நாட்டில் வடிவமைப்பட்ட ஏஎடிஎம் இயந்திரத்தை ஸ்வீடன் அறிமுகம் செய்தது.1967ல் அறிமுகம் செய்யப்பட்ட ஏடிஎம் மூன்றே ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பிரபலம் அடைந்தது.

இந்தியாவில் 1987ஆம் ஆண்டு மும்பையில் ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் 1999ல் தான் பல நகரங்களில் பயன்பாட்டிற்கு வந்தன. அச்சமயத்தில் நாள் ஒன்றுக்கு ஒருவர் மூவாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு இருந்தது. நாடெங்கும் 800 ஏடிஎம்கள் மட்டுமே பயன்பட்டு வந்த நிலையில், மிக குறுகிய காலத்தில் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்தது.

இன்று உலகம் முழுவதும் மூன்று மில்லியன் ஏஎடிஎம் இயந்திரங்களுக்கும் மேல் உள்ளதாக கூறப்படுகிறது. தங்களுக்கு தேவையான பணத்தை தேவையான சமயத்தில் எடுத்துக் கொண்டு பண பரிவர்த்தனையில் மக்கள் தாங்கள் விரும்பும்படியான சேவையை பெற்று வருவதற்கு இது வித்திட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X