அண்ணனுக்கு 1,423 அடி கடிதம்: உலக சாதனை படைத்த பெண்

Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருவனந்தபுரம்:அண்ணனுக்கு கடிதம் எழுதி உலக சாதனை படைத்த பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.கேரள மாநிலம் பீர்மேடு நகரில் வசிப்பவர் கிருஷ்ணபிரசாத். இவரது சகோதரி, அரசுப் பொறியாளரான கிருஷ்ணப்ரியா, திருமணமாகி முண்டகாயம் கிராமத்தில் வசிக்கிறார். சர்வதேச சகோதரர்கள் தினத்தன்று ஆண்டு தவறாமல் தன் சகோதரர் பிரசாத்துக்கு கடிதம் எழுதுவது கிருஷ்ணப்ரியாவின் வழக்கம். இந்த ஆண்டு
அண்ணனுக்கு 1,423 அடி கடிதம்: உலக சாதனை படைத்த பெண்

திருவனந்தபுரம்:அண்ணனுக்கு கடிதம் எழுதி உலக சாதனை படைத்த பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.
கேரள மாநிலம் பீர்மேடு நகரில் வசிப்பவர் கிருஷ்ணபிரசாத். இவரது சகோதரி, அரசுப் பொறியாளரான கிருஷ்ணப்ரியா, திருமணமாகி முண்டகாயம் கிராமத்தில் வசிக்கிறார். சர்வதேச சகோதரர்கள் தினத்தன்று ஆண்டு தவறாமல் தன் சகோதரர் பிரசாத்துக்கு கடிதம் எழுதுவது கிருஷ்ணப்ரியாவின் வழக்கம். இந்த ஆண்டு வேலைப்பளு காரணமாக சர்வதேச சகோதரர் தினமான மே 24ல் அவரால் கடிதம் எழுத முடியவில்லை.

ஓய்வு கிடைத்த மற்றொரு நாளில் அண்ணனுக்கு கடிதம் எழுதத் துவங்கினார். காகித உருளைகள் 15 வாங்கி, பிறந்தது முதல் இருவரும் வளர்ந்த, இருவருக்குள்ளும் நிகழ்ந்த சண்டை, செலுத்திய அன்பு என நீண்ட கடிதத்தை, 12 மணி நேரத்தில் எழுதி முடித்தார். அந்தக் கடித பார்சலை அண்ணன் கிருஷ்ண பிரசாத்துக்கு அனுப்பினார். தங்கையிடம் இருந்து வந்த பார்சலில், பரிசு தான் இருக்கிறது என கிருஷ்ணபிரசாத் நினைத்தார்.

அதில் இருந்த கடிதத்தை படிக்க படிக்க அவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. கிருஷ்ணப்ரியா அனுப்பியிருந்த கடிதம் 5 கிலோ எடையும், 1,423 அடி நீளமும் இருந்தது. இதைஅடுத்து, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள 'யுனிவர்சல் ரிக்கார்ட் போரம்' நிறுவனத்துக்கு, தங்கை தனக்கு எழுதிய கடிதத்தை அனுப்பினார். இது 'உலக சாதனை' என அந்நிறுவனம் சான்றளித்து உள்ளது. உலக சாதனை படைத்த கிருஷ்ணப்ரியாவுக்கு உறவினர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
27-ஜூன்-202213:36:12 IST Report Abuse
வாய்மையே வெல்லும் தங்கைக்கோர் கீதம் படம் எடுத்த டிஆர் என்கிற ராஜேந்திரன் ஐயாவை விட்டு பரிசு கொடுத்தால் இறைவன் மகிழ்வான்
Rate this:
Cancel
nallavan - manigramam,பஹ்ரைன்
27-ஜூன்-202213:17:06 IST Report Abuse
nallavan super
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X