அசாம் வெள்ளத்தால் 25 லட்சம் பேர் பாதிப்பு

Updated : ஜூன் 26, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
கவுஹாத்தி-வடகிழக்கு மாநிலமான அசாமில் வெள்ளத்தால், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.அசாமில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இங்குள்ள 27 மாவட்டங்களில், 2,895 கிராமங்கள் மற்றும் கவுஹாத்தி உட்பட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 2.33 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 637 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கவுஹாத்தி-வடகிழக்கு மாநிலமான அசாமில் வெள்ளத்தால், 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.அசாமில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.



latest tamil news



இங்குள்ள 27 மாவட்டங்களில், 2,895 கிராமங்கள் மற்றும் கவுஹாத்தி உட்பட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 2.33 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 637 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுதும் 259 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

மாநிலம் முழுதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன. பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நேற்று முன் தினம் வரை, 121 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுதும் வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் நேற்று காலையில் இருந்து சில இடங்களில் வெள்ளம் வடியத் துவங்கியது. இங்குள்ள கோபிலி ஆறு மற்றும் அதன் கிளையான குஷியாரா ஆறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


latest tamil news


முதல்வருக்கு சால்வை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களை, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் ரப்பர் படகில் சென்று பார்வையிட்டார். சில்செர் நகரில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததை சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்த போது, வெள்ளத்தில் முழுதும் மூழ்கியிருந்த ஒரு வீட்டின் கதவின் மேற்பகுதியில் ஒரு இளைஞர் ஏறி நின்று, சர்மாவை அழைத்தார்.மீட்புப் படை வீரர்கள் சென்று அந்த இளைஞரை தோளில் துாக்கி வந்தனர். அந்த இளைஞர் அசாமின் பாரம்பரிய உடையான 'கமுசா' என அழைக்கப்படும் சால்வையை முதல்வர் சர்மாவுக்கு பரிசளித்தார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சர்மா, பின்னொரு நாளில் நாம் இருவரும் சேர்ந்து ஒரு டீ அருந்தலாம் எனக்கூறி அந்த இளைஞருக்கு விடை கொடுத்தார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
27-ஜூன்-202209:10:30 IST Report Abuse
பாமரன் ஜாக்கிரதை 😠
Rate this:
Cancel
27-ஜூன்-202208:35:57 IST Report Abuse
அப்புசாமி அஸ்ஸாமில் வளர்ச்சியோ வளர்ச்சி. நேத்திக்கி ம்யூனிச்சில் கூட பேசிக்கிட்டாங்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X