கேரள முதல்வர் பாதுகாப்புக்கு ரூ.33 லட்சத்தில் நவீன ரக கார்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
திருவனந்தபுரம்-கேரள முதல்வர் பாதுகாப்புக்காக, 33 லட்சம் ரூபாய் செலவில் மேலும் ஒரு கார் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது .இங்கு, முதல்வர் பினராயி விஜயனுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரது பாதுகாப்புக்காக நவீன வசதிகள் உடைய மேலும் ஒரு கார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவனந்தபுரம்-கேரள முதல்வர் பாதுகாப்புக்காக, 33 லட்சம் ரூபாய் செலவில் மேலும் ஒரு கார் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது



latest tamil news


.இங்கு, முதல்வர் பினராயி விஜயனுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரது பாதுகாப்புக்காக நவீன வசதிகள் உடைய மேலும் ஒரு கார் வேண்டும் என, டி.ஜி.பி., அனில்காந்த் பரிந்துரை செய்திருந்தார்.இதையடுத்து, முதல்வரின் பாதுகாப்புக்காக 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'கார்னிவல் லிமோசின்' என்ற கார் வாங்க, கேரள உள்துறை செயலர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.


latest tamil news



முதல்வர் விஜயனின் பாதுகாப்புக்காக ஒரு 'டாடா ஹாரியர்' மற்றும் மூன்று 'இன்னோவா கிறிஸ்டா' கார்கள் வாங்க ஆறு மாதத்துக்கு முன் முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது டாடா ஹாரியருக்கு பதிலாக கார்னிவல் லிமோசின் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கேரள அரசு நிதிப்பற்றாக்குறையில் தள்ளாடும்போது முதல்வரின் பாதுகாப்புக்கு நவீன ரக கார்கள் வாங்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-202215:15:01 IST Report Abuse
ஆரூர் ரங் அவருக்கென்ன? தங்கத்தில் கூட கார் வாங்கமுடியும்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
27-ஜூன்-202215:07:03 IST Report Abuse
Suppan முதல்வருக்கு இந்த அளவாவது கார்கள் கொடுக்கப்பட்டால்தான் பந்தா காட்ட முடியும் . இதுதான் நவீன கம்யூனிச சித்தாந்தம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27-ஜூன்-202213:23:23 IST Report Abuse
Ramesh Sargam கேரள முதல்வரால் அந்த தங்க கடத்தல் காரிக்கு மிகவும் அச்சுறுத்தலாம்... அவள் பாதுகாப்புக்கும் இப்படி ஒரு காஸ்ட்லி கார் கொடுப்பீர்களா? கொடுத்துடுங்க, மக்கள் வரிப்பணம்தானே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X