செயல்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் வேண்டும்! மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் வலியுறுத்தல்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி,-அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு அதிகாரம் உள்ள நிலையில், அந்தப் பதிவை ரத்து செய்வதற்கான அதிகாரமும் வழங்க வேண்டும் என, மத்திய தேர்தல் கமிஷன் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.சட்டசபை, லோக்சபா உட்பட அனைத்து தேர்தல்களையும் நடத்துவதற்காக அமைக்கப்பட்டது தேர்தல் கமிஷன். அரசியல் சாசனத்தின்படி, தன்னாட்சி அதிகாரம் உள்ளது இந்த அமைப்பு. 50 கட்சிகள்அரசியலில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு அதிகாரம் உள்ள நிலையில், அந்தப் பதிவை ரத்து செய்வதற்கான அதிகாரமும் வழங்க வேண்டும் என, மத்திய தேர்தல் கமிஷன் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.சட்டசபை, லோக்சபா உட்பட அனைத்து தேர்தல்களையும் நடத்துவதற்காக அமைக்கப்பட்டது தேர்தல் கமிஷன். அரசியல் சாசனத்தின்படி, தன்னாட்சி அதிகாரம் உள்ளது இந்த அமைப்பு.latest tamil news
50 கட்சிகள்

அரசியலில் ஈடுபட விரும்பும் கட்சிகளை பதிவு செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நிபந்தனைகளை மீறும் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்படவில்லை.நம் நாட்டில் எட்டு கட்சிகள் தேசியக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, 50 கட்சிகள் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.அதே நேரத்தில், 2,800க்கும் மேற்பட்ட, அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. இதில் பல கட்சிகள் வெறும் பெயருக்கு மட்டுமே உள்ளன. தேர்தல் கமிஷனில் பதிவு செய்யும் கட்சிகளுக்கு, வருமான வரிச் சலுகை உள்ளிட்ட சில சலுகைகள் கிடைக்கும். இதற்காகவே பலர் தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.தேர்தலில் போட்டியிடாமல், பெயருக்கு மட்டுமே உள்ள கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு அதிகாரம் கேட்டு தேர்தல் கமிஷன் போராடி வருகிறது.
வருமான வரி

தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பதிவுக்கான விதிகளை முறையாக கடைப்பிடிக்காத கட்சிகளின் பதிவுகளை தேர்தல் கமிஷன் நீக்கி வருகிறது. அதன்படி, சமீபத்தில், 198 அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டது. ஆய்வுகளின்போது, தாங்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லாத காரணங்களால், இவற்றின் பதிவு ரத்து செய்யப்பட்டது.இதைத் தவிர, முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்யாதது மற்றும் மோசடியில் ஈடுபட்ட சில கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வருமான வரித் துறைக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்து உள்ளது.இந்நிலையில், அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு அதிகாரம் உள்ளதுபோல், குறிப்பிட்ட காரணங்களின்போது, பதிவை ரத்து செய்வதற்கான அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.சமீபத்தில், மத்திய சட்டத் துறை செயலர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியபோது, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் இதை மீண்டும் வலியுறுத்திஉள்ளார்.latest tamil newsஅதிகாரம்'
அங்கீகரிக்கப்படாத கட்சியின் பதிவை ரத்து செய்வது சிக்கலான விஷயம். இதில் தேவையில்லாமல் அரசியல் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் சிக்க நேரிடும். அதனாலேயே இந்த அதிகாரம் வழங்கப்படவில்லை' என. சட்டத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27-ஜூன்-202213:14:26 IST Report Abuse
Ramesh Sargam அதேபோல் ஆட்சிக்கு வந்து, மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்படாத கட்சிகளையும் ரத்து செய்ய அதிகாரம் வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் வலியுறுத்த வேண்டும். சும்மா ஆட்சி பீடத்தில் அமர்ந்தால் மட்டும் போதாது. மக்களுக்கு பணிவிடை செய்வதையே நோக்கமாக கொண்டு, மக்கள் நலனில் அக்கறை காட்டவேண்டும். அப்படி மக்கள் நலனில் அக்கறை காட்டாமல், பொழுதுவிடிந்தால், யாரை குறை சொல்லலாம், எப்படி போராட்டம் நடத்தலாம், எப்படி ஊரை கொள்ளை அடிக்கலாம் என்று செயல்பட்டுக்கொண்டிருந்தால், அப்படிப்பட்ட கட்சிகளையும் ரத்து செய்ய வேண்டும்.
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
27-ஜூன்-202218:19:57 IST Report Abuse
Rafi இத்தனை ஆண்டுகால பிஜேபி கட்சி காங்கிரஸை குறை கூறி கொண்டிருப்பதை சுட்டி காட்டி அந்த கட்சியை ரத்து செய்ய சொல்கின்றீர்களா?...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-202212:32:53 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஒட்டுண்ணி போல வளரும் கட்சிகளை முதலில் தடை செய்யவேண்டும்..
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-202212:30:53 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஒட்டுண்ணி போல வளரும் கட்சிகளை முதலில் தடை செய்யவேண்டும் ..... உதாரணம் பாமக, விசிக etc. etc.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X