6 மாநில இடைத்தேர்தல்; பா.ஜ., அமோக வெற்றி

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி,-டில்லி உட்பட ஆறு மாநிலங்களில், மூன்று லோக்சபா மற்றும் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், இரண்டு லோக்சபா, மூன்று சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. பஞ்சாபில் சங்ரூர் லோக்சபா தொகுதியில் ஆம் ஆத்மியின் எம்.பி.,யாக இருந்தவர் பகவந்த் மான். இங்கு, பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாநில

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-டில்லி உட்பட ஆறு மாநிலங்களில், மூன்று லோக்சபா மற்றும் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், இரண்டு லோக்சபா, மூன்று சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது.



latest tamil news



பஞ்சாபில் சங்ரூர் லோக்சபா தொகுதியில் ஆம் ஆத்மியின் எம்.பி.,யாக இருந்தவர் பகவந்த் மான். இங்கு, பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாநில முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றதையடுத்து, சங்ரூர் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். உத்தர பிரதேசத்தில் ஆஜம்கர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராம்பூர் தொகுதியின் எம்.பி.,யாக இருந்த சமாஜ்வாதியின் ஆஜம்கான் ஆகியோர், பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதையடுத்து இருவரும் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் போர்டோவாலி நகர், அகர்தலா, ஜுப்ராஜ் நகர், சுர்மா ஆகிய தொகுதிகள் காலியாக இருந்தன. டில்லியில் ரஜிந்தர் நகர், ஆந்திராவில் அத்மகூர், ஜார்க்கண்டில் மந்தார் ஆகிய சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன.இந்த மூன்று லோக்சபா மற்றும் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.பஞ்சாபின் சங்ரூர் தொகுதியில் அகாலி தளம் அமிர்தரசின் பிரிவின் தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் வெற்றி பெற்றார். இவர், ஆம் ஆத்மி தொடர்ச்சி 3ம் பக்கம்6 மாநில இடைத்தேர்தல்...முதல் பக்கத் தொடர்ச்சிவேட்பாளர் குர்மயில் சிங்கை ௫,௦௦௦க்கும் அதிகமான ஒட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

உத்தர பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்த இரண்டு லோக்சபா தொகுதிகளையும் ஆளுங்கட்சியான பா.ஜ., கைப்பற்றியது. ராம்பூர் தொகுதியில் பா.ஜ.,வின் ஞான்ஷியாம் லோதி, சமாஜ்வாதியின் முகமது ஆசிம் ராஜாவை, ௪௨ ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.ஆஜம்கர் தொகுதியில் பா.ஜ.,வின் தினேஷ் லால் யாதவ் நிராஹுவா, சமாஜ்வாதியின் தர்மேந்திர யாதவை தோற்கடித்தார்.டில்லியில் ரஜிந்தர் நகர் நகர் சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் துர்கேஷ் பதக், பா.ஜ.,வின் ராஜேந்திர பட்டியாவை, ௧௧ ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆந்திராவின் அத்மகூர் தொகுதியில், ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் மேக்பதி விக்ரம் ரெட்டி வெற்றி பெற்றார். ஜார்க்கண்டின் மந்தார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பி நேஹா டிர்க்கி வெற்றி பெற்றார்.



latest tamil news


முதல்வர் வெற்றி

வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் போர்டோவாலி நகர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட முதல்வர் மாணிக் சஹா, காங்கிரசின் ஆசிஷ் குமார் சஹாவை ௬,000க்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.அகர்தலா தொகுதியில் காங்கிரசின் சுதீப் சாய் பர்மன் வெற்றி பெற்றதையடுத்து, திரிபுரா சட்டசபையில் காங்கிரஸ் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சுர்மா தொகுதியில் பா.ஜ.,வின் ஸ்வ்பனா தாஸ், ஜுப்ராஜ்நகர் தொகுதியில் பா.ஜ.,வின் மலினா தேப்நாத் ஆகியோர் வெற்றி பெற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
27-ஜூன்-202216:55:17 IST Report Abuse
Sampath Kumar பிஜேபி ஜெயிக்க வில்லை என்றால் தான் கஷ்டம் இடை தேர்தலில் ஜெயிப்பது என்பது ஆளும் கட்சின் சாம்ரித்தியதி பொறுத்து உள்ளது அதை தான் பிஜேபி செய்து உள்ளது அக்னிபத் கிற்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை
Rate this:
Cancel
27-ஜூன்-202215:09:51 IST Report Abuse
ஆரூர் ரங் அப்போ அகனிபத் போராட்டமெல்லாம் புஸ்வாணமா? அடப் பாவமே. 😝 ராகுல்.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
27-ஜூன்-202214:34:42 IST Report Abuse
Raj திரிபுராவில் காங்கிரஸ் ஒரு இடம் வந்ததை கூட இவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. திரிபுராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்ஹா செங்கல்லால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பாஜக ஆதரவாளர்களால் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அம்மாநில காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் ஆசிஷ் குமார் சாஹா தெரிவித்துள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X