நூற்றாண்டு பழமையான ராஜாஜி காய்கறி மார்க்கெட் 7 கோடி ரூபாயில் புதுப்பிக்க திட்டம்!

Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள நுாற்றாண்டு பழமையான, ராஜாஜி காய்கறி மார்க்கெட் 7 கோடி ரூபாயில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. இருப்பினும் தற்காலிக மார்க்கெட் அமைய உள்ள இடம் தேர்வில் இழுபறி நீடிக்கிறது.காஞ்சிபுரத்தில் உள்ள ராஜாஜி காய்கறி மார்க்கெட் 1907ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன் பின் 1933ம் ஆண்டு வடக்கு
நூற்றாண்டு பழமையான ராஜாஜி காய்கறி மார்க்கெட் 7 கோடி ரூபாயில் புதுப்பிக்க திட்டம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள நுாற்றாண்டு பழமையான, ராஜாஜி காய்கறி மார்க்கெட் 7 கோடி ரூபாயில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. இருப்பினும் தற்காலிக மார்க்கெட் அமைய உள்ள இடம் தேர்வில் இழுபறி நீடிக்கிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள ராஜாஜி காய்கறி மார்க்கெட் 1907ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன் பின் 1933ம் ஆண்டு வடக்கு பகுதி கட்டப்பட்டதாகவும், தெற்கு பகுதி, 1945ம் ஆண்டு கட்டப்பட்டதாக மார்க்கெட்டில் உள்ள நுழைவு பகுதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நுாற்றாண்டை கடந்து செயல்படும் இந்த மார்க்கெட் அப்போதைய மக்கள் தொகைக்கு தகுந்தவாறு கட்டப்பட்டது. தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சியில், 3 லட்சம் பேர் உள்ளனர். அதே போல் கிராம பகுதிகளும் விரிவடைந்து மார்க்கெட்டுக்கு வருவோர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது ராஜாஜி மார்க்கெட்டில் 350 கடைகள் செயல்பட்டு வருகின்றன.அதற்கு தகுந்தவாறு மார்க்கெட்டை புதுப்பிக்க வேண்டும், சிமென்ட் கட்டடம் கட்ட வேண்டும் என முந்தைய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பின் பல்வேறு காரணங்களால் அந்த பணி நிறுத்தப்பட்டது.இந்த மார்க்கெட் தற்போது சிமென்ட் கூரை மற்றும் ஓடுகளால் ஆனது. பழைய கட்டடமாக இருப்பதால் மழை காலத்தில் உள்ளே தண்ணீர் தேங்கும். பொது மக்கள் காய்கறி வாங்கி செல்வதற்கு சிரமம் ஏற்படும். பழைய மார்க்கெட்டை முழுமையாக அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்த நிலையில், தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய மார்க்கெட் கட்டுமான பணி துவங்க தயாராக இருக்கிறோம். ஜூலை 15ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என வியாபாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நகர் பகுதியில் இரு இடங்கள் தேர்வு செய்து வியாபாரிகளிடம் கூறியுள்ளோம். அதில் எந்த இடத்திற்கு செல்கின்றனர் என வியாபாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதன்பின் அந்த இடத்தில் பொது கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படும். இந்த வாரத்திற்குள் அவர்கள் முடிவு தெரிவித்து விட்டால், மார்க்கெட் பழைய இடத்தை முற்றிலும் இடித்து விட்டு, கட்டுமான பணி துவங்கி விடும். மார்க்கெட் வளாகத்தில் 'பார்க்கிங்' வசதியுடன், 248 கடைகள் கட்டப்பட உள்ளது. விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- பா.நாராயணன், கமிஷனர், காஞ்சிபுரம் மாநகராட்சி.

நான்கு இடம் தேர்வு

தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு நான்கு இடம் பார்க்கப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த வையாவூர், பச்சையப்பா கல்லுாரி மைதானம், கருக்கினில் அமர்ந்தவள் கோவில் அருகில் உள்ள அறநிலையத் துறை கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் ஓரிக்கை பழைய மார்க்கெட் என நான்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த இடத்திற்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்படுகிறது என இன்னும் முடிவு செய்யப்பட வில்லை.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X