முதல் 'டி-20' கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காஷ்மீர் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அறிமுகமானார்.அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டப்ளினில் நடந்தது. மழை காரணமாக 'டாஸ்' நிகழ்வில் சிறிது தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும், 'டாஸ்'
India vs Ireland, Ind vs Ire, T20I, Team India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காஷ்மீர் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அறிமுகமானார்.

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டப்ளினில் நடந்தது. மழை காரணமாக 'டாஸ்' நிகழ்வில் சிறிது தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும், 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பவுலிங்' தேர்வு செய்தார். ஐ.பி.எல்., தொடரில் 'வேகத்தில்' மிரட்டிய உம்ரான் மாலிக் அறிமுக வாய்ப்பு பெற்றார். அயர்லாந்து அணியில் கானர் ஒல்ப்ஹர்ட் அறிமுகமானார்.


latest tamil news





டெக்டர் அரைசதம்:


'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பவுலிங்' தேர்வு செய்தார். மழை குறுக்கிட, 12 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. துவக்கத்தில் அயர்லாந்து விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் பால்பிர்னி(0) அவுட்டானார். ஹர்திக் 'வேகத்தில்' ஸ்டர்லிங்(4) வீழ்ந்தார். அவேஷ் கானிடம் டெலானி(8) சரண்டர் ஆனார். பின் ஹாரி டெக்டர், லார்கன் டக்கர் 'டக்கராக' ஆடினர்.

டெக்டர் வரிசையாக பவுண்டரி, சிக்சர் விளாசி தொல்லை கொடுத்தார். டக்கர், 18 ரன் எடுத்தார். டெக்டர், 29 பந்தில் அரைசதம் எட்டினார். அயர்லாந்து அணி 12 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்தது. டெக்டர்(64), டக்ரெல்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.



இந்திய வீரர்கள் அதிரடி:


எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன், தீபக் ஹூடா அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசிய இஷான் கிஷன் 26 ரன்னில் யங் பந்தில் கிளீன் போல்ட் ஆனார். அடுத்த பந்திலேயே, சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

3 சிக்சர்கள் விளாசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 24 ரன்னில் லிட்டில் பந்தில் அவுட் ஆனார். மறு முனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா இறுதி வரை ஆட்டமிழக்காமல், 47 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி 9.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X