தூத்துக்குடியில்' சிப்பெட்' கல்வி மையம்: மத்திய அமைச்சர்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
'துாத்துக்குடி மாவட்டத்தில், 'சிப்பெட்' கல்வி மையம் விரைவில் துவக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். @subboxhd@துாத்துக்குடியில் 'சிப்பெட்' கல்வி மையம்@@subboxhd@@சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், 'சிப்பெட்' என்ற, மத்திய பிளாஸ்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், 1968ல் துவங்கப்பட்டது. பிளாஸ்டிக்ஸ் தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை பட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

'துாத்துக்குடி மாவட்டத்தில், 'சிப்பெட்' கல்வி மையம் விரைவில் துவக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.latest tamil newsதுாத்துக்குடியில் 'சிப்பெட்' கல்வி மையம்சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், 'சிப்பெட்' என்ற, மத்திய பிளாஸ்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், 1968ல் துவங்கப்பட்டது. பிளாஸ்டிக்ஸ் தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் டிப்ளமா படிப்புகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கிண்டியில் உள்ள சிப்பெட் வளாகத்தில், 59.19 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு அடுக்கு உடைய தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தொழில்நுட்ப மையத்திற்கான அடிக்கல் நாட்டி பேசியதாவது:பிளாஸ்டிக் துறை வளர்ச்சியில், சிப்பெட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழகம் வாகன உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. அத்துறைக்கு தேவையான பிளாஸ்டிக் சார்ந்த உதிரி பாகங்கள், மருத்துவத் துறைக்கு தேவையான பிளாஸ்டிக் கருவிகள், வேளாண் துறைக்கு தேவையான பொருட்கள் அனைத்திற்கும், சிப்பெட்டின் பங்களிப்பு இன்றியமையாதது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, பெட்ரொ கெமிக்கல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது.


latest tamil news


இத்துறையின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இந்த தொழில்நுட்ப மையத்தால் திறன் பெற்ற தொழிலாளர்கள், இத்துறையில் அதிகம் கிடைப்பர். இதனால், அதிக வேலை வாய்ப்பும் உருவாகும். மேலும், தென் மாநிலங்களில் அதிக சிப்பெட் மையங்களை உருவாக்கும் வகையில், தமிழகத்தில் துாத்துக்குடி மாவட்டத்தில் புதிய மையம் அமைக்கப்படும். கர்நாடகா, குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் சிப்பெட் மையம் அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
27-ஜூன்-202216:03:39 IST Report Abuse
Vijay D Ratnam மத்திய அமைச்சர் அவர்களே, தமிழக கடற்கரை நாகை மாவட்டம் தென்கிழக்கு பகுதியில் வேதாரண்யம் - கோடியக்கரை பகுதியில் ஒரு பெரிய சிப்காட் மையம் அமைக்கலாமே. முத்துப்பேட்டையிலிருந்து வேளாங்கண்ணி 55 கிமீ. வேளாங்கண்ணியில் இருந்து கோடியக்கரை 50 கிமீ. கோடியக்கரையில் இருந்து முத்துப்பேட்டை 56 கிமீ. அந்த முக்கோண பகுதியை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 2500 சதுர கிமீ பகுதி அது. அங்கு பெரிதாக வளர்ச்சி எதுவும் இல்லை, பெரிய தொழிற்சாலைகளும் இல்லை, விவசாயமும் பெரிதாக இல்லை. அந்த பகுதியில் பெரியளவில் தொழில்கள் தொடங்க முயற்சி எடுக்க கூடாதா. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ரயில்போக்குவரது நிறுத்தப்பட்ட மீட்டர் கேஜ் பாதையில் திருத்துரைப்பூண்டி கோடியக்கரை அகல ரயில் பாதை அமைக்கும் பணிஅறிவிப்போடு நிற்கிறது. அருகாமையில் தமிழக கடற்கரையின் மையப்புள்ளியான காரைக்கால் கப்பல் துறைமுகம் கூட இருக்கிறது. பெரியளவில் சரக்குகளை கன்டெய்னர்களை கையாளும் காரைக்கால் துறைமுகம் இருக்கிறது. அதுவும் மிக விரைவில் அந்த துறைமுகம் இந்தியாவின் தொழில் சக்கரவர்த்தி கவுதம் அதானி வசம் செல்ல போவதாக தகவல். ஏன் அந்த பகுதியை இந்தியாவின் ஒரு பெரிய தொழிற்பகுதியாக உங்களால் உருவாக்க முடியாதா. மத்திய அரசு மனது வைத்து செயல்பட்டால் இந்தியாவின் மான்ச்செஸ்டராக அந்த பகுதியை உருவாக்க முடியும். தூத்துக்குடியில் திறந்து மூடிய ஸ்டெர்லைட் தொழிற்சாலையை அன்றைக்கே கோடியக்கரையில் தொடங்கி இருந்தால் இன்றைய தேதியில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அந்த ஒரு கம்பெனி தாமிரம் சப்ளை செய்திருக்கும்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
27-ஜூன்-202213:47:49 IST Report Abuse
Barakat Ali "நான் இதை இதை இதைத்தான் பலமுறை வற்புறுத்தினேன்" தூத்துக்குடி மக்களவை எம்.பி. கனிமொழி பெருமிதம் ......
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-202214:33:38 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஸ்டிக்கர் ஒட்டுறவன் உடன்பிறப்பாச்சே ............
Rate this:
Kannan Iyer - Chennai,இந்தியா
27-ஜூன்-202215:19:24 IST Report Abuse
Kannan Iyerநாங்க போட பிட்சை... எங்க சொந்த காச குடுக்கறோம் போல...
Rate this:
Cancel
 வீரப்பன் தங்கவேல் இந்த அறிவிப்பு வரவேற்க வேண்டியது...1995இல் இருந்து நாமக்கல் மாணவர்கள் குறிப்பிட்ட சதவீதம் படித்து பட்டம் பெற்று சிறந்த நிலைகளில் உள்ளோம்..!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X