ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்ததும் ஸ்டாலினுக்கு காய்ச்சல்;அண்ணாமலை

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (84) | |
Advertisement
சென்னை,--''ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியின பெண்ணை அறிவித்ததும், முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்து விட்டது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், தமிழக பா.ஜ., சார்பில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை,--''ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியின பெண்ணை அறிவித்ததும், முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்து விட்டது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.latest tamil news


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், தமிழக பா.ஜ., சார்பில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:கடந்த எட்டு ஆண்டுகளில் பா.ஜ.,வினர் போல, எந்த கட்சியினரும் கடின உழைப்பை வெளிப்படுத்தியது கிடையாது.

2014 லோக்சபா தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சி அமைத்தது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டு உள்ளார். இது, பா.ஜ.,வின் சிறப்பான சமூக நீதிக் கொள்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.பா.ஜ., கொள்கைகளுக்கு ஒத்துப்போகாத பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூட, திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால், சமூக நீதி பற்றி பேசும் தலைவர்கள் அதை பின்பற்றுவதில்லை.அந்த வகையில் திருமாவளவன் போன்றவர்கள், கண்ணாடி முன் நின்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழக மக்களை, தி.மு.க., அரசு குழப்பி வருகிறது. ஜனாதிபதி வேட்பாளராக ஒரு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்மணி அறிவிக்கப்பட்ட உடன், முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது.

சமூக நீதி பற்றி பேசும் அவருக்கு பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தைரியம் இருக்கிறதா; தனிமனிதனுக்கு சுய மரியாதை ஏற்படுத்தி தந்தது மோடி அரசு.ஊழல் நாடாக இருந்த இந்தியாவை, பதவி ஏற்ற பின் சாதனை நாடாக மாற்றி காட்டியவர் நரேந்திர மோடி. புலியை பார்த்து பூனை சூடு போட்டது போல, ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல; அதாவது, 'குட்டி மோடி' போல ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.அதற்கு மோடி போல கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையான மக்கள் சேவையாற்ற வேண்டும்.

தி.மு.க., வைப் பொறுத்தவரை கட்சிதான் குடும்பம்; குடும்பம் தான் கட்சி. இப்படிப்பட்ட சூழலில் மோடி போல வரவேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லை. பிரதமர், 'ஆப்பரேஷன் கங்கா' என்ற பெயரில் திட்டங்களை வகுத்து வந்தார். தமிழகத்தில், 'ஆப்பரேஷன் கஞ்சா' என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.


latest tamil news


இதை கட்டுப்படுத்தும் துணிவு இருக்கிறதா.வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் இருந்து, பா.ஜ.,வுக்கு 25 எம்.பி.,க்கள் கிடைக்கப்போவது உறுதி. நிச்சயம் அந்த மாற்றம் நடக்கும். தமிழகத்தில் தாமரை மலரும். இந்த மண்ணில் என்றென்றும் பா.ஜ., ஆட்சி தொடரும்.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா, சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., அமைப்பு பொது செயலர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'தமிழகத்தில் பயனற்ற ஆட்சி'

பா.ஜ., கூட்டத்தில், மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:சமூக நீதி பற்றி பேச தி.மு.க., அரசுக்கு எந்த அருகதையும் கிடையாது. பா.ஜ.,வில் மட்டும் தான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவரும், அமைச்சராக முடியும். தி.மு.க.,வில் பாரம்பரியமாக இருப்பவர்கள் மட்டுமே பதவிகளைப் பெற முடியும்.தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆட்சி அதிகாரமும் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறது. இதர மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், அமைச்சர் பதவிகளில் முன்னணியில் இருக்கின்றனர்.இங்கே 'திராவிட மாடல்' என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஊழல்கள் நிறைந்தது, திராவிட மாடல். தமிழகத்தில் நடப்பது, ஒரு பயனற்ற ஆட்சி தான். எட்டு ஆண்டுகளில் ஒரு சிறிய குறை கூட சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். நாடு முழுதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லாட்சி புரிந்து வரும் மோடியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
27-ஜூன்-202220:35:17 IST Report Abuse
Arachi அண்ணாமலை தான் என்ன பேசுகிறோம் என்பதை உணராமலே பேசுகிறார். ஸ்டாலின் மிசாவை சந்தித்தவர் அரசியல் காய்ச்சல் வராது. இவர் காச்சல் வந்திருக்கிறது. அதனால் மூளையில் வரட்சி வந்திருக்கிறது என்வே வாயில் வந்தபடி உள்ருகிறார். வாரிசு அரசியல் என்று யாரும் தமிழ் நாட்டில் வந்துவிடமுடியாது என்பதை அண்ணாமலை உணரவேண்டும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
27-ஜூன்-202218:19:17 IST Report Abuse
M  Ramachandran தீ மு க்கா மோடி மேல் உள்ள சொந்த வெறுப்பு காரணமாக எதெற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார் மம்தா.. அது போல் தன ஜனாதிபதிக்காக யோசிக்கலால் அவர்கள் தேர்ந்தேடுத்த வேட்பு மனுதாரர். அந்த மண்பானமை முடைய மம்தாவுடன் சூடாலினும் யோசிக்காமல் ஆதரவு தெரிவிப்பது பிற்காலத்தில் வெறுக்க காரணமாகும்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
27-ஜூன்-202217:27:22 IST Report Abuse
sankar இந்த ஆளு சதா உளறிக்கொண்டே இருக்கார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X