ஆட்டோ கட்டணம்: அரசாணை வருமா?

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை : ஆட்டோ கட்டணத்தை உடனே நிர்ணயித்து, அரசாணை வெளியிட வேண்டும் என, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மனு அளித்தனர்.'தனியார் செயலிகள், பெட்ரோல் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால், ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை மீட்க, அரசே செயலியை உருவாக்கி, பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்' என, ஆட்டோ தொழிற்சங்கத்தினர்
Auto, Auto Fare, ஆட்டோ, கட்டணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ஆட்டோ கட்டணத்தை உடனே நிர்ணயித்து, அரசாணை வெளியிட வேண்டும் என, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மனு அளித்தனர்.

'தனியார் செயலிகள், பெட்ரோல் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால், ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை மீட்க, அரசே செயலியை உருவாக்கி, பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்' என, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.


latest tamil news



இதையடுத்து, நுகர்வோர், ஆட்டோ ஓட்டுனர்களை சந்தித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின், குறைந்தபட்ச கட்டணம், ஒவ்வொரு கி.மீ.,க்குமான கட்டணம், காத்திருப்பு கட்டணம் உள்ளிட்டவற்றை நிர்ணயித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினர்.

இந்நிலையில், சி.ஐ.டி.யூ., - எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில், மறுநிர்ணய கட்டணத்துக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி, போக்குவரத்து துறை அமைச்சர், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
27-ஜூன்-202217:21:13 IST Report Abuse
R S BALA சென்னையில் ஓலா உபேர் ஆட்டோவிலேயே இப்போ அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள்.. இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும் ஆட்டோ, மீட்டர், கட்டண கொள்ளைகள் திருந்த போவதில்லை..
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
27-ஜூன்-202217:03:42 IST Report Abuse
Soumya ஆட்டோக்காரனுங்களும் திருட்டு டீம்கா போல பகல் கொள்ளைக்காரனுங்கப்பா நம்பிள் கட்டிங் கமிஷன் மொதலாளி ஒப்புதல் தருவாரூ
Rate this:
Cancel
Sridhar - Chennai,இந்தியா
27-ஜூன்-202216:49:55 IST Report Abuse
Sridhar கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொள்கை. மக்களுக்கு பலன் கிடைக்குமா? கட்சிக்காரரா மக்களா? இருதலை கொள்ளி எறும்புபோல் அரசு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X