ஆட்டோ கட்டணம்: அரசாணை வருமா?| Dinamalar

ஆட்டோ கட்டணம்: அரசாணை வருமா?

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (22) | |
சென்னை : ஆட்டோ கட்டணத்தை உடனே நிர்ணயித்து, அரசாணை வெளியிட வேண்டும் என, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மனு அளித்தனர்.'தனியார் செயலிகள், பெட்ரோல் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால், ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை மீட்க, அரசே செயலியை உருவாக்கி, பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்' என, ஆட்டோ தொழிற்சங்கத்தினர்
Auto, Auto Fare, ஆட்டோ, கட்டணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ஆட்டோ கட்டணத்தை உடனே நிர்ணயித்து, அரசாணை வெளியிட வேண்டும் என, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மனு அளித்தனர்.



'தனியார் செயலிகள், பெட்ரோல் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால், ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை மீட்க, அரசே செயலியை உருவாக்கி, பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்' என, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.


latest tamil news



இதையடுத்து, நுகர்வோர், ஆட்டோ ஓட்டுனர்களை சந்தித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின், குறைந்தபட்ச கட்டணம், ஒவ்வொரு கி.மீ.,க்குமான கட்டணம், காத்திருப்பு கட்டணம் உள்ளிட்டவற்றை நிர்ணயித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினர்.



இந்நிலையில், சி.ஐ.டி.யூ., - எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில், மறுநிர்ணய கட்டணத்துக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி, போக்குவரத்து துறை அமைச்சர், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X