திருப்பூரின் வளர்ச்சியை ஒப்பிட முடியாது!: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வியப்பு

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
திருப்பூர்: ''திருப்பூரின் வளர்ச்சியை, உலகில் எந்த ஒரு நகரத்துடனும், ஒப்பிட முடியாது,'' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ), ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) சார்பில், ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி, திருப்பூர், திருமுருகன்பூண்டியில் நடந்தது.'பியோ' தலைவர் சக்திவேல் வரவேற்றார்.மத்திய
Tiruppur, Piyush Goyal, பியூஷ் கோயல், திருப்பூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர்: ''திருப்பூரின் வளர்ச்சியை, உலகில் எந்த ஒரு நகரத்துடனும், ஒப்பிட முடியாது,'' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ), ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) சார்பில், ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி, திருப்பூர், திருமுருகன்பூண்டியில் நடந்தது.'பியோ' தலைவர் சக்திவேல் வரவேற்றார்.மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.

மத்திய அமைச்சர் பேசியதாவது: பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மூலம், திருப்பூர் 30 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித்தருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும், 10 லட்சம் தொழிலாளர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.கடந்த 1985ல் 15 கோடி ரூபாயாக இருந்த திருப்பூரின் ஏற்றுமதி, தற்போது 30 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. 37 ஆண்டுகளில், 2 ஆயிரம் மடங்கு ஏற்றுமதி உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 22.8 சதவீதம் என்ற சிறந்த ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியுடன் திருப்பூர் பயணிக்கிறது.75 ஆடை நகரங்கள்


திருப்பூரின் இந்த வளர்ச்சியை, உலகில் எந்த ஒரு நகரத்துடனும், ஒப்பிட முடியாது. நாட்டின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், திருப்பூரைப் போன்ற 75 ஆடை உற்பத்தி நகரங்களை நாடு முழுவதும் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், பின்தங்கிய மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்.

அடுத்த 27 ஆண்டுகளில், 30 டிரில்லியன் டாலர் (2,340 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரத்தை நம் நாடு எட்டிப்பிடிக்கும். இந்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியுமா என சந்தேகம் எழலாம்; திருப்பூர், ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ஏற்றுமதி; 20 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகம் என, மொத்தம் 50 ஆயிரம் கோடி வர்த்தகத்தை எட்டியுள்ளது.

திருப்பூரின் வளர்ச்சியை பார்க்கும்போது, நாட்டின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலரை அடைவது சாத்தியமானதுதான். 135 கோடி பேரில், ஒவ்வொருவரும் ஒரு அடி முன்னெடுத்து வைத்தாலும் போதும்; நம் நாடு 135 கோடி அடி முன்னோக்கிச் செல்லும். இவ்வாறு, மத்திய அமைச்சர் கோயல் பேசினார்.


latest tamil newsமுன்னதாக, புதிய திருப்பூரில் உள்ள நேதாஜி ஆயத்த ஆடைப்பூங்காவில், ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனத்தை அமைச்சர் பார்வையிட்டார். மத்திய இணை அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் சுதிர் சேக்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய அரசின் 3 தாரக மந்திரம்: அமைச்சர் முருகன் 'பளிச்'

திருப்பூரில் நேற்று பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடன் மத்திய ஜவுளி அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துரையாடினார். இதில் பங்கேற்ற, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:இந்த உலகமே இந்தியாவின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் மோடி எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். இதற்கு முந்தைய அரசையும், தற்போதைய அரசையும் ஒப்பிட்டுப்பாருங்கள். எந்த அரசும் தாரக மந்திரத்துடன் செயல்பட்டது இல்லை.பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சேவை, நல்லாட்சி, ஏழை நலன் ஆகிய மூன்றையும் தாரக மந்திரமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவை ஆற்றல் மிகு தேசமாக, பிரதமர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். பஞ்சு விலை உயர்வால் தொழில் பாதிக்கப்படுவதாக திருப்பூர் பின்னலாடை துறையினர் தெரிவித்தனர். அரசின் கவனத்துக்கு கொண்டுசென்றதையடுத்து, பஞ்சு மீதான இறக்குமதி வரி உடனடியாக நீக்கப்பட்டது. மூன்றே மாதங்களில் இரண்டு நாடு களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
27-ஜூன்-202214:26:16 IST Report Abuse
Soumya தேர்தல் நேரத்தில் திருப்பூரில் ஹார்பர் கட்டித்தாறேனேன்னு சொன்ன டுபாக்கூர் விடியல் எங்கய்யா
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
27-ஜூன்-202212:33:08 IST Report Abuse
Dhurvesh அதனால் தான் கொஞ்சம் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த பஞ்சு விலை ஏற்றி ஆட்டம் காட்டினார்களோ
Rate this:
Soumya - Trichy,இந்தியா
27-ஜூன்-202214:18:38 IST Report Abuse
Soumyaமத்திய அரசின் உதவி இல்லாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் மட்டும் தான்டா இருக்கும்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-ஜூன்-202212:27:06 IST Report Abuse
sankaseshan ஒன்றியம் இருப்பதால் குன்றியம் இயங்குகிறது. ஒன்றியத்திடமிருந்து குன்றியம் கடன் மானியங்கள் பெறுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X