பாரம்பரிய பெருமை இழக்கும் நாயக்கர் மகால்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
மதுரை: தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் வரலாற்று சின்னம் என்ற பெருமையை பெற்ற மகாலை காண பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். மாலையில் மதுரையின் வரலாற்றை விளக்கும் ஒளி ஒலி காட்சி நடத்தப்படுகிறது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மகாலில்தான் அதன் அலுவலகமும் இயங்குகிறது.கட்டட கலை பெருமைக்கு சான்றாக விளங்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் வரலாற்று சின்னம் என்ற பெருமையை பெற்ற மகாலை காண பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். மாலையில் மதுரையின் வரலாற்றை விளக்கும் ஒளி ஒலி காட்சி நடத்தப்படுகிறது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மகாலில்தான் அதன் அலுவலகமும் இயங்குகிறது.



latest tamil news




கட்டட கலை பெருமைக்கு சான்றாக விளங்கும் மகாலுக்குள் சினிமா படப்பிடிப்பு நடத்தக் கூடாது. கட்டடம் சேதமாவதை தடுக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். அதனால் சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், சமீபகாலமாக பியூட்டி பார்லர் நடத்துவோர் மகாலில் மாடல் பெண்களை வைத்து 'போட்டோ ஷூட்' எடுக்கின்றனர்.

மகால் உள்ளே போட்டோ, வீடியோ எடுக்க பிளாஷ் லைட், அம்பர்லா லைட் பயன்படுத்த கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன. இதை காற்றில் பறக்க விட்டு சில மாதம் முன் ஒரு குறும்படம் எடுத்துள்ளனர். அதில் டம்மி துப்பாக்கி உட்பட சில ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். ஏற்கனவே மகால் துாண்களின் மறைவில் காதல் லீலை நடத்தும் காதலர்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது.


latest tamil news




இந்நிலையில் குறும்படம், பெரும்படம் என ஒரு கும்பல் மகாலில் ஆட்டம் போடத் துவங்கியுள்ளது. இதற்கு மகால் நிர்வாகமும் தாராள அனுமதி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே போனால் திருமண, காதணி விழா நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விட்டு விடுவர். பறவைகள் நுழைய கூடாதென மகாலின் மேல் வலை விரித்த மகால் நிர்வாகத்திற்கு, போட்டோ ஷூட், குறும்படம் எடுக்க அனுமதிக்க கூடாதென தெரியாதா என்பது ஆர்வலர்களின் கேள்வி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஜூன்-202220:17:43 IST Report Abuse
Vena Suna இதனை திமுக அரசு கண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
27-ஜூன்-202217:38:20 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மகால் வளாகத்தில் (அலுவலக பின்புறம் )உள்ள ச சிலைகள் ..மன்னர்களால் பூஜை செய்யப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட விகிரஹங்கள் கேட்பாரற்று செதிலடைந்து அழுக்காய் இருக்கிறது ..இந்து இயக்கங்கள் இதற்க்கு தீர்வு காண முயற்சிக்கவேண்டும்
Rate this:
Cancel
27-ஜூன்-202215:31:45 IST Report Abuse
 Venugopal S இதற்கும் தமிழக அரசைக் குறை கூற பாஜகவின் ஒரு கூட்டம் வந்து விட்டது.மதுரை நாயக்கர் மஹால் மத்திய அரசின் தொல்லியல் துறையின் (Archeological survey of India) கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய பாஜக அரசு தான் பொறுப்பு.
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
27-ஜூன்-202219:14:58 IST Report Abuse
Neutralliteஏன் பாஸ், இதுக்கு மட்டும் ஸ்டிக்கர் வாணாமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X