பழவேற்காடு மீன் இறங்குதளத்தில் இரை தேடும் பறவைகள்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
பழவேற்காடு: பழவேற்காடு மீன் இறங்குதளத்தில், வெள்ளை கொக்கு, கூழைக்கடா, வர்ண நாரைகள் ஜாலியாக சுற்றித் திரிந்து இரை தேடி வருகின்றனபழவேற்காடு பறவைகள் சரணாலயப் பகுதியில், பூநாரை, வர்ண நாரை, கூழைக்கடா, உல்லான் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் உள்ளன.சரணாலயத்திற்கு, நவம்பர் முதல், பிப்ரவரி மாதங்களில், பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்கின்றன.

பழவேற்காடு: பழவேற்காடு மீன் இறங்குதளத்தில், வெள்ளை கொக்கு, கூழைக்கடா, வர்ண நாரைகள் ஜாலியாக சுற்றித் திரிந்து இரை தேடி வருகின்றன

பழவேற்காடு பறவைகள் சரணாலயப் பகுதியில், பூநாரை, வர்ண நாரை, கூழைக்கடா, உல்லான் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் உள்ளன.சரணாலயத்திற்கு, நவம்பர் முதல், பிப்ரவரி மாதங்களில், பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்கின்றன. பறவைகள் சீசன் முடிந்தும் தற்போது ஏராளமான பறவைகள் அங்கு உள்ளன.



latest tamil news




பழவேற்காடு ஏரி, முகத்துவாரம் பகுதி, மீன் இறங்குதளம் உள்ளிட்ட பகுதிகளில், இவை கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.சில தினங்களாக, பழவேற்காடு மீன் இறங்குதளம் பகுதியில் அதிகளவில் வெள்ளை கொக்கு, கூழைக்கடா, வர்ண நாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

கூழைக்கடா பறவைகள் ஏரியில் நீந்தியபடியும், கொக்குகள் கரையோரங்களில் கிடைக்கும் மீன்களை பிடித்து ருசித்தபடியும் சுற்றித் திரிகின்றன.மீன் பிடித்து கரை திரும்பும் மீனவர்கள், மீன்களை வாங்க காத்திருக்கும் வியாபாரிகள், சுற்றுலா பயணியர் என அனைவரையும் இந்த பறவைகள் கவர்ந்து வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X