ஆன்லைன் சூதாட்டத்துக்கு அதிக வரி விதிப்பதால் என்ன பயன்?

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக சமீப காலங்களில் பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனால் நாடு முழுக்க ஆன்லைன் சூதாட்ட கேம்களை தடை செய்ய வலியுறுத்தப்படுகிறது. அனைத்துவித ஆன்லைன் சூதாட்ட கேம்களை ஒரே நேரத்தில் தடை செய்ய முடியாவிட்டாலும் மத்திய அரசு இந்த கேம்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டது. தலைநகர் டில்லியில் விரைவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ஆன்லைன் சூதாட்டம், குதிரை ரேஸ், online gambling, horse race

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக சமீப காலங்களில் பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனால் நாடு முழுக்க ஆன்லைன் சூதாட்ட கேம்களை தடை செய்ய வலியுறுத்தப்படுகிறது. அனைத்துவித ஆன்லைன் சூதாட்ட கேம்களை ஒரே நேரத்தில் தடை செய்ய முடியாவிட்டாலும் மத்திய அரசு இந்த கேம்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டது. தலைநகர் டில்லியில் விரைவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆன்லைன் சூதாட்ட கேம்களுக்கு ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


latest tamil news



மேகாலயா மாநில முதல்வர் கொன்ராட் சங்க்மா தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதன்படி ஆன்லைன் கேம்கள், குதிரைப் பந்தயம், கேசினோக்கள் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களது நுழைவு கட்டணத்திலும் 28% ஜிஎஸ்டி வரி விதிக்க கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



மேலும் குதிரை ரேஸ் போட்டிகளைக் காணவரும் பார்வையாளர்கள் அங்கு விற்கப்படும் பொருட்களை வாங்க இனி
ஜிஎஸ்டி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக பான் மசாலா, புகையிலை உள்ளிட்டவற்றின் விற்பனை கணிசமாகக் குறையும் என நம்பப்படுகிறது. ஆன்லைன் கேம் பயனாளர்கள், கேசினோ விளையாடுபவர்கள், குதிரை ரேஸில் பணம் செலுத்துபவர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்குமே அதிக ஜிஎஸ்டி விதிப்பதால் இதில் ஈடுபடுவோர், கேளிக்கையாக நினைப்போர் எண்ணிக்கை எதிர்காலத்தில் படிப்படியாகக் குறையுமென நம்பப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X