பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவக்கம் : காளையின் ஆதிக்கம் தொடருமா ?

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
சர்வதேச பங்குச்சந்தைகளின் ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜூன் 27) ஏற்றத்துடன் துவங்கியது. சென்செக்ஸ் 700 புள்ளிகளும், நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரங்களில் பணவீக்கம் காரணமாக சரிவை கண்ட அமெரிக்க பங்குச்சந்தைகள், வெள்ளியன்று 3 சதவீதம் அளவுக்கு உயர்வுடன் முடிவடைந்தன. இதன் தாக்கம் ஆசிய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது.
பங்குச்சந்தை, பங்கு,வர்த்தகம்,உயர்வு,சென்செக்ஸ்,நிஃப்டி

சர்வதேச பங்குச்சந்தைகளின் ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜூன் 27) ஏற்றத்துடன் துவங்கியது. சென்செக்ஸ் 700 புள்ளிகளும், நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி வர்த்தகமாகி வருகிறது.



கடந்த வாரங்களில் பணவீக்கம் காரணமாக சரிவை கண்ட அமெரிக்க பங்குச்சந்தைகள், வெள்ளியன்று 3 சதவீதம் அளவுக்கு உயர்வுடன் முடிவடைந்தன. இதன் தாக்கம் ஆசிய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. ஜப்பான், சிங்கப்பூரை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளில் பங்கு வர்த்தகம் இன்று உயர்வுடன் துவங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 200 புள்ளிகள் அதிகரித்து 15,900 புள்ளிகளுடன் வர்த்தகமாகியது.


latest tamil news


ஐ.டி., மற்றும் உலோக நிறுவன பங்குகள் மதிப்பு 2 சதவீதம் அதிகரித்தன. நிஃப்டி ஆட்டோ குறியீடு மதிப்பு 1 சதவீதம் அதிகரித்துள்ளது.



ரூபாய் மதிப்பு உயர்வு :



ஜி 7 மாநாட்டில் ஈரான் மற்றும் ரஷ்யா விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1 அமெரிக்க டாலர் சரிந்துள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து, ரூ.78.27 காசுகளாக உள்ளது.


latest tamil news



தொழில்நுட்ப பார்வையில், இதே போக்கு நீடிக்கும்பட்சத்தில், பங்குச்சந்தைகள் 2 முதல் 3 சதவீதம் உயர்வை காணலாம். அதேநேரம். நிஃப்டி 16,000 புள்ளிகளை தொடும் போது, சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பங்குச்சந்தை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X