ஜனாதிபதி தேர்தல்: யஸ்வந்த்சின்ஹா வேட்பு மனு தாக்கல்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்கு எதிர்கட்சி சார்பில் போட்டியிடும் யஸ்வந்த்சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் காங்., கம்யூ., உள்ளிட்ட எதிர்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் சென்றனர்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பதவிக்காலம் முடிவதை அடுத்து வரும் ஜூலை 18 ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கென ஆளும் மத்திய பா.ஜ., கூட்டணி வேட்பாளராக திரவுதி முர்மு கடந்த வாரத்தில்

புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்கு எதிர்கட்சி சார்பில் போட்டியிடும் யஸ்வந்த்சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் காங்., கம்யூ., உள்ளிட்ட எதிர்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் சென்றனர்.



latest tamil news



ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பதவிக்காலம் முடிவதை அடுத்து வரும் ஜூலை 18 ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கென ஆளும் மத்திய பா.ஜ., கூட்டணி வேட்பாளராக திரவுதி முர்மு கடந்த வாரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இன்று எதிர்கட்சி சார்பில் யஸ்வந்த்சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார்.


latest tamil news





எதிர்கட்சியினர் யார் ? யார் ?



காங்., எம்.பி., ராகுல், காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மார்க்., கம்யூ., சீத்தாராம் யெச்சூரி , சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி சார்பில் பரூக் அப்துல்லா, திமுக சார்பில் ராஜா, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் கே.டி. ராமாராவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, திரிணாமுல் காங்., தரப்பில் அபிஷே க் சிங் பானர்ஜி, ஆகியோர் மனு தாக்கலின் போது யஸ்வந்த்சின்ஹாவுடன் சென்றனர்.ஆம்ஆத்மி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் புறக்கணித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
28-ஜூன்-202200:24:32 IST Report Abuse
Aarkay ஐயோ பாவம் சரத் பவாரும், அப்துல்லாவும் எஸ்கேப் ஆன நிலையில் இவர் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். ஐயோ பாவம்
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
27-ஜூன்-202218:13:07 IST Report Abuse
Narasimhan அவர் பின்னே சென்ற இதே கூட்டம் அவர் நிதி மந்திரியாக இருந்த போது கேலி செய்தது. நோ சூடு நோ சுரணை
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-ஜூன்-202216:20:15 IST Report Abuse
sankaseshan பலிஆட்டுக்கு துணை கையாலாகாத தேச விரோதிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X