அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ்: பெரும்பான்மை இழந்தது மஹா., அரசு

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (38) | |
Advertisement
புதுடில்லி: சிவசேனா தலைமையிலான கூட்டணி மஹாராஷ்டிர அரசுக்கு அளித்த ஆதரவினை 38 அதிருப்தி எம்எல்ஏ.,க்களும் வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மஹா., அரசு பெரும்பான்மையை இழந்தது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், ‛மஹா விகாஸ் அகாதி' என்னும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிவசேனா மூத்த தலைவரும்,
Maharashtra Govt, Loses, Majority, Rebel, Shiv Sena, MLAs, Withdraws Support, Eknath Shinde, மஹாராஷ்டிரா, அரசு, பெரும்பான்மை இழப்பு, சிவசேனா, அதிருப்தி எம்எல்ஏ, ஏக்நாத் ஷிண்டே, உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சிவசேனா தலைமையிலான கூட்டணி மஹாராஷ்டிர அரசுக்கு அளித்த ஆதரவினை 38 அதிருப்தி எம்எல்ஏ.,க்களும் வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மஹா., அரசு பெரும்பான்மையை இழந்தது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், ‛மஹா விகாஸ் அகாதி' என்னும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிவசேனா மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார். அவருடன், 38 சிவசேனா எம்.எல்.ஏ.,க்களும், ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அசாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா சார்பில் சட்டசபை துணை சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டது.


latest tamil newsஇதன் தொடர்ச்சியாக 16 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு மஹாராஷ்டிரா சட்டசபை துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். இன்று (ஜூன் 27) மாலை 5 மணிக்குள் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. தகுதி நீக்க நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் 38 அதிருப்தி சிவசேனா எம்எல்ஏ.,க்கள் மஹாராஷ்டிர அரசுக்கு தாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மஹா விகாஸ் அகாதி கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் சிவசேனா தலைமையிலான மஹாராஷ்டிர அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது.

ரிட் மனு


தகுதி நீக்க நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில், துணை சபாநாயகரை நீக்க கோரும் தீர்மானம் நிலுவையில் உள்ள நிலையில், தகுதி நீக்க விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாது என அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக 5 நாட்களுக்குள் மஹாராஷ்டிர சட்டசபை செயலர், துணை சபாநாயகர், சட்டசபை குழு தலைவர், சிவசேனா தலைமை கொறடா, மஹாராஷ்டிர அரசு, மத்திய அரசு ஆகியோர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
27-ஜூன்-202220:29:33 IST Report Abuse
sankaranarayanan சிவா சிவா என்று சிவனே என்று இல்லாமல் இந்த உதவாத தாக்கரே சன்ஜய் ராவுத் பேச்சைக்கேட்டு சகுனிமாதிரி தேர்தலில் பா.ஜா,பாவுடன் கைகோர்த்து சேர்ந்தகு போட்டியிட்டு துரோகம் செத்தால், அவர்களுக்கு மற்றவர்களும் துரோகம் செய்துவிட்டார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்கள் - "டிட் பார் டாட்" அதுதான்.சன்ஜய் ராவுத்தத்தை கழட்டுவிட்டால்தான் சிவசேனா உருப்படும் இல்லையேல் சிவனேன்னு இருக்கும் சேனாவாக ஆகிவிடும் விரைவில்.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
27-ஜூன்-202220:29:09 IST Report Abuse
தஞ்சை மன்னர் மற்றோர் முறை மத்திய அரசு தவறு செயகிறது , இன்னொரு அ இ அ தி மு க
Rate this:
Cancel
27-ஜூன்-202219:08:47 IST Report Abuse
K.R.Prem Kumar Bangalore In Maharashtra issue, SC not only sent notices to Dy. Speaker and other government officials, but also given sufficient time (instead of today up to 11th July) to Eknath
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X