குளு குளு குலு மணாலி இந்தியாவின் சொர்க்கம்!| Dinamalar

குளு குளு குலு மணாலி இந்தியாவின் சொர்க்கம்!

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | |
புதிய பூமி, எங்கும் பனி மழைபொழிய, பச்சை நிறத்துடனும் நம்மை இச்சை மூட்டும் இடம் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள 'குலு - மணாலி'. பனி மூடிய பசுமை மலைகளையும், தூய்மையான ஜில் ஜில் காற்றையும் விரும்புகிறவர்களுக்கு சுற்றுலா செல்ல இது சிறந்த தேர்வாகும். புதுமணத் தம்பதிகளுக்கு மிகவும் விருப்பமான ஹனிமூன் ஸ்பாட்டாகவும் இது திகழ்கிறது. இந்த சுற்றுலா தலத்தை இரட்டையர்கள் என்றே
Lifestyle, Tour, Travel, India, Kullu, Manali, HimachalPradesh, லைப்ஸ்டைல், பயணம், இந்தியா சுற்றுலா, குலு, மணாலி, ஹிமாச்சல்பிரதேசம், டிப்ஸ்

புதிய பூமி, எங்கும் பனி மழைபொழிய, பச்சை நிறத்துடனும் நம்மை இச்சை மூட்டும் இடம் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள 'குலு - மணாலி'. பனி மூடிய பசுமை மலைகளையும், தூய்மையான ஜில் ஜில் காற்றையும் விரும்புகிறவர்களுக்கு சுற்றுலா செல்ல இது சிறந்த தேர்வாகும். புதுமணத் தம்பதிகளுக்கு மிகவும் விருப்பமான ஹனிமூன் ஸ்பாட்டாகவும் இது திகழ்கிறது. இந்த சுற்றுலா தலத்தை இரட்டையர்கள் என்றே சொல்லலாம்.

குலு:


latest tamil newsகுலுப் பள்ளத்தாக்கு என்பது ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலு மாவட்டத்தின் மிகப்பெரியப் பள்ளத்தாக்கு ஆகும். இந்தப் பள்ளத்தாக்கின் மத்தியில் பீஸ் நதி ஓடுகிறது. குலுவில் காணத்தகுந்த கண்கவர் இடங்கள் ரகுநாத் கோவில், ரெய்சன், ஷோஜா, கசோல், நகார்.

மணாலி:

அதேபோல் மனம் மயக்கும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமூடிய மலைச்சிகரங்கள் மற்றும் ஆப்பிள் தோட்டங்கள் என தனக்கென பல அற்புத அழகை வைத்து கொண்டு மணாலி, சுற்றுலாப்பயணிகளை வசீகரித்து வருகிறது. மேலும் இங்கு சோலாங் பள்ளத்தாக்கு, மணாலி பறவைகள் சரணாலயம், புராதான கோவில்கள் என பல இடங்கள் உள்ளன.


latest tamil newsஇப்படி இந்த இரண்டு இடங்களிலும் பார்க்க பல இடங்கள் உண்டு. த்ரில்லிங் விளையாட்டுகள் பிடிப்பவர்களுக்கு டிரெக்கிங், கேம்பிங், ஆங்கிலிங், ரிவர் ராப்டிங், ஸ்கீயிங், போன்ற சாகச செயல்பாடுகள் இங்கு அதிகம் உள்ளன.

பருவ காலம்:


latest tamil newsகுலு, மணாலியில் வருடமுழுவதுமே இதமான இனிமையான பருவநிலை நிலவுகிறது. இருப்பினும் உங்கள் இனிய ஹாலிடே ட்ரிப்பை நீங்கள் பிளான் பண்ண சிறந்த பருவகாலங்கள் சில உள்ளன. கோடை காலமான மார்ச் முதல் ஜூன் மாதங்கள் மிகவும் உகந்ததாக உள்ளது. மார்ச் மாதம் அங்கு இயல்பு வெப்பநிலையானது 10 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவிலேயே இருக்கிறது. இந்த சமயத்தில் குலு, மணாலியின் சிறப்புமிக்க பருவமலர்கள் பூத்துக்குலுங்குவதால் இதை ரசிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடைக் காலத்தில் வர அதிகம் விரும்புகின்றனர்.

வெள்ளை மலை:latest tamil news


நவம்பர்- ஜனவரி பனிப்பொழிவு காலக்கட்டத்தில் பலரும் சுற்றுலா செல்ல வருகிறார்கள். காரணம் அப்போது பனிப்பொழிவு தீவிரமாக இருக்கும். அந்த பனிப்பொழிவை ரசிக்கவே சுற்றுலாப்பயணிகள் இங்கு படை எடுப்பனர். சில சமயம் அதிகமான பனிப்பொழிவினால், சாலைகள் மூடப்பட்டு பயணம் செய்ய முடியாத நிலை உருவாகும். அதனால் அந்த சமயங்களில் இங்கு வருவதை தவிர்ப்பது நல்லது.

அதேபோல் செப்டம்பர் மாதத்தில் மழை குறையத்தொடங்கி, அக்டோபர் மாதம் முதல் பனிக்காலம் ஆரம்பிக்கிறது. இதனால் அந்தசமயங்களில் இயல்பு வெப்பநிலை -1 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழே சென்றுவிடும். அதனால் அந்த பருவநிலையையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எப்படி பயணிக்கலாம்:

குலு மணாலியை முழுமையாக சுற்றிப்பார்க்க குறைந்தபட்சம் 4 முதல் 5 நாட்கள் தேவைப்படும்.

விமான பயணம்: குலுவில் உள்ள விமான நிலையம், முக்கிய நகரத்திலிருந்து சுமார் 58 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஒருவருக்கு விமானச் செலவு

சுமார் ரூ. 8000 வரை ஆகும்.

ரயில் பயணம் : ஜோகிந்தர்நகர், மணாலிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம். அம்பாலா மற்றும் சண்டிகர் ஆகிய பகுதியிலிருந்து ரயிலில் மணாலியை அடையலாம். ரயிலின் கட்டணம் 3 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். டெல்லி, சண்டிகார் போன்ற முக்கிய நகரத்திற்கு சென்று, அங்கிருந்து, பஸ் அல்லது கார் மூலம் சென்று, குலு மணாலியை சுற்றி பார்க்கலாம். குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் செலவாகும்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X