தீஸ்தா செதல்வாட்: வளர்ச்சியும், வீழ்ச்சியும்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (48) | |
Advertisement
புதுடில்லி: குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக போலி ஆவணங்களை தயாரித்து வழக்கு தொடர்ந்த ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான தீஸ்தா செதல்வாட் நேற்று (ஜூன் 26) கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக பல்வேறு வகைகளில் வளர்ந்து வந்த தீஸ்தா செதல்வாட் இப்போது வீழ்ந்து கிடக்கிறார்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்த
Teesta Setalvad, Rise, Fall, தீஸ்தா செதல்வாட், வளர்ச்சி, வீழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக போலி ஆவணங்களை தயாரித்து வழக்கு தொடர்ந்த ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான தீஸ்தா செதல்வாட் நேற்று (ஜூன் 26) கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக பல்வேறு வகைகளில் வளர்ந்து வந்த தீஸ்தா செதல்வாட் இப்போது வீழ்ந்து கிடக்கிறார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்த தீஸ்தாவின் தாத்தா எம்.சி செதல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல். தீஸ்தா ஊடகவியலாளராக தன் பணியை துவக்கினாலும், பெண்கள், தலித்கள், முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராடியுள்ளார். தீவிர பெண்ணியவாதியான தீஸ்தா, 2007ல் மஹாராஷ்டிராவில் பொதுச்சேவை செய்ததற்காக மத்திய அரசின் ‛பத்ம ஸ்ரீ' விருதை பெற்றுள்ளார். 2006ல் நானி ஏ.பால்கிவாலா விருது, 2009ல் இந்திய முஸ்லிம்கள் சங்கங்களின் கூட்டமைப்பு விருதையும் பெற்றுள்ளார். உலக செயற்பாடுகளுக்கான பார்லிமென்ட் உறுப்பினர்கள் ‛ஜனநாயக காவலர்' விருதினை நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க்குடன் சேர்ந்து பெற்றுள்ளார்.வீழ்ச்சி


latest tamil news


இப்படி அறியப்பட்ட சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், 2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடிவை எதிர்த்து பிரதமர் மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது இவரின் வீழ்ச்சிக்கு அடித்தளமானது. குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., இஷான் ஜாப்ரி கொல்லப்பட்டார். இதில், அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு, குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடி உள்பட 64 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றது. இதனை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, ஆமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் தன்னையும் இணைத்துக்கொண்டார். இந்த மனு தள்ளுபடியானதால் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஜாகியா மனு தாக்கல் செய்தார். அங்கும் மனு தள்ளுபடியானது. இதனையடுத்து 2018ல் ஜாகியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் தீஸ்தா செதல்வாட்டும் மேல்முறையீடு செய்திருந்தார்.


latest tamil news


இந்த வழக்கும் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ‛சிலருக்கு எதிராக செயல்படுவதற்காக, இந்த வழக்கை தீஸ்தா செதல்வாட் பயன்படுத்தியுள்ளார். அவர் ஜாகியா ஜாப்ரியின் உணர்வோடு விளையாடியுள்ளார். இந்த பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில் நேற்று போலி ஆவணங்களை தயாரித்து அளித்த குற்றச்சாட்டின் பேரில், தீஸ்தாவை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் மும்பையில் கைது செய்தனர். இவரது வெளிநாட்டு தொடர்பு, அவரது வங்கிக் கணக்குகள், அவரோடு தொடர்புடையவர்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்யும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
28-ஜூன்-202200:09:43 IST Report Abuse
Aarkay இதெல்லாம் ஒரு பிழைப்பு
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-202219:11:43 IST Report Abuse
Rajagopal இந்தப் பெண்மணியின் மூதாதையர்கள் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக வேலை பார்த்தவர்கள். ஜெனரல் டையர் சீக்கியர்களை சுட்டுக் கொன்றபோது அதை ஆதரித்தவர் இவரது முப்பாட்டனார். இவர்கள் வழி வழியாக இந்தியாவுக்கு எதிராக விசுவாசத்தோடு வேலை செய்து வந்திருக்கிறார்கள். இந்தப்பெண்மணியின் கணவர் ஒரு இஸ்லாமியர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, அதை எதிர்த்து யாரும் மேலே வந்து விடக்கூடாது என்கிற முயற்சியில் நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநிலத்து முதல்வராக இருக்கையில், அவர் மீது பல அவதூறுகளை ஆதாரங்களின்றி குற்றம் சாட்டி, அழிக்கப்பார்த்தவர்களில் இவரும் ஒருவர். பொய்களை சாமர்த்தியமாக ஒன்று கோர்த்து உண்மையைப்போல ஜோடிப்பதில் திராவிடக் கட்சியினருக்கு நிகரானவர். கடைசியில் உண்மை வெளிவந்து விட்டது. மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்து விட்டால் இவர்களது ஊழல் சாம்ராச்சியம் அழிந்து விடும் என்கிற பயத்தில் இத்தனை மும்முரமாக செயல்பட்டிருக்கிறார்கள். எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளது நாட்டுக்கு நல்லது.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
27-ஜூன்-202219:03:27 IST Report Abuse
Viswam கலவரத்துலே பாதிக்கப்பட்டதாக ஒரே மாதிரி இருபத்தியிரண்டு பொய் அபிடேவிட் கொடுத்தது, கள்ள விட்னஸ் ஜோடித்து கோர்ட்டில் தாக்கல் செய்தது, பாதிக்கப்பட்டவர்களுக்காக பண உதவி செய்வதாக கூறி எல்லாரிடமும் வசூல் செய்து ஆட்டைய போட்டது, அயல்நாடுகளில் இருந்து வந்த டொனேஷனை சொந்த செலவுக்கு உபயோகம் செய்தது .... . செஞ்ச அட்டூழியம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. ப்ச். எப்பவோ புடிச்சு போட்டிருக்கணும். ஆனா காங்கிரஸ் பத்ம ஸ்ரீ கொடுத்து கவுரவித்தது. மோடி அரசு வந்தவுடன் என்ஜிஓக்களுக்கு வச்ச ஆப்பில் டீஸ்தாவுடைய சப்ராங் ட்ரஸ்டும் மாட்டிக்கிச்சு. அதுக்கப்புறம் அம்மாளுக்கு பைசா ரொட்டேட் செய்ய முடியலை சுப்ரீம் கோர்டுலே வாங்கின தடையும் போச்சு. இனிமேல் சிறையில் தான் மீதி நாளும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X