முன்பெல்லாம் மதுரைக்கு என்ன பேமஸ் என்றால் மதுரை இட்லி, மல்லி, மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் என கூறுவோம். தற்போது அந்த லிஸ்ட்டில், டேஸ்டியான ஜிகர்தண்டாவும் சேர்ந்துள்ளது. ஆனால் ஜிகர்தண்டா என்பது தமிழ் வார்த்தை கிடையாது. இது ஒரு ஹிந்தி வார்த்தை. ஜிகர் என்றால் இதயம்; தண்டா என்றால் குளிர்ச்சி என பொருள். இதயத்தை குளுமை படுத்தும் பானம் என குறிப்பதால் இந்த பானத்திற்கு ஜிகர்தண்டா என பெயர் வந்தது.
தேவையான பொருட்கள்
• பால் 2 லிட்டர்
• நன்னாரி சிரப் - 3-4 டேபிள் ஸ்பூன்
• பாதாம் பிசின் -2 கல்
• சக்கரை - தேவையான அளவு
• ஐஸ் கிரீம் - 1 கப்
• பால்கோவா - 2 டேபிள் ஸ்பூன்
![]()
|
பாதாம் பிசின் - இந்த பாதாம் பிசினை சுமார் எட்டு மணி நேரமாவது ஊற வைத்தால்தான் நாம் உபயோகிக்க முடியும். அதனால் ஜிகர்தண்டா செய்யும் ஒரு நாள் முன்பே இதை ஊற வைக்க வேண்டும். இரவே இதை ஊற வைத்தால் மறுநாள் செய்ய சரியாக இருக்கும். வெறும் இரண்டு கல்களை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் . அதுவே ஒரு கிண்ணம் நிறைய மணல் மணலாக, ஜெல்லியை போன்று கிடைக்கும். இதுவே இந்த பானத்தை குளிர்ச்சியாக பயன்படுத்தும் முக்கிய பொருளாகும். இது இல்லாமல் ஜிகர்தண்டா செய்ய முடியாது.
ஐஸ் கிரீம் - ஜிகர்தண்டா செய்ய, அதற்கேற்ற சில பால் கொண்டு செய்யப்படும் ஐஸ்கிரீம் வகைகள் உள்ளன, அதை உபயோகியுங்கள். வேண்டும் என்றால் குல்பி வகையை சேர்ந்த கேசர் பாதாம் குல்பி போன்றவற்றை பயன்படுத்தலாம்.
![]()
|
பால் - ஒரு லிட்டர் பாலை அடுப்பில் சிம்மில் அடுப்பை வைத்து, சர்க்கரை சேர்த்து கால் பங்கு வரும் வரை காய்ச்சவேண்டும். அதேபோல் இன்னொரு கிண்ணத்தில் ஒரு லிட்டர் பாலை ஆடையுடன் இருக்கும் பால் போல், குறிப்பாக பாஸந்தியை போல் காய்த்து கொள்ளலாம். இதற்கு பதில் பால்கோவாவையும் நன்கு மசித்து சேர்த்துக்கொள்ளலாம் .
ஜிகர்தண்டா செய்முறை :
• முதலில் ஒரு டம்ளரில் பாதாம் பிசினை இரண்டு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள்.
• அதற்கு மேல் சிறிது நன்னாரி சர்பத்தை ஊற்றிக் கொள்ளுங்கள்.
![]()
|
• இறுதியாக அதன் மேல் ஒரு பெரிய ஸ்கூப் ஐஸ் கிரீமை எடுத்து வைத்து, அதனுடன் நன்னாரி சர்பத்தை மீண்டும் கலந்தால் ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.