திருமணம்... வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். மெகந்தி, முகூர்த்தம், ரிசப்ஷன் என பல நிகழ்வுகள் திருமண வைபவத்தில் அரங்கேறுகின்றன. மேலும், 2 - 5 நாட்கள் வரை நீடிக்கும் இந்த வைபவத்தில் மணப்பெண் அலங்காரத்துக்கும், தோற்றத்துக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்கேற்ப பிரைடல் பேஷன் தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப ஆயிரக்கணக்கிலோ அல்லது லட்சக்கணக்கிலோ திருமண உடை அமைகிறது. புடவைகள் மட்டுமின்றி லெஹெங்காக்களுக்கும் தற்போது முக்கியத்துவம் தருவது பேஷனாகிவிட்டது.
அதற்கேற்ப திருமணச் செலவில் கணிசமான பங்கு பட்டுப்புடவைகள், டிசைனர் லெஹெங்காக்கள், இந்தோ-வெஸ்டர்ன் கவுன்கள் மற்றும் ஆபரணங்களுக்குச் செல்கிறது. ஆனால் பணத்தை கொட்டி வாங்கிய அந்த லெஹெங்கா பலரது அலமாரிகளில் காட்சிப் பொருளாக மட்டுமே பத்திரமாக இருக்கும். திருமணத்துக்கு பின்னர் ஓரிரு முறை பயன்படுத்துவதே அரிதாக உள்ளது. எனவே உங்கள் லெஹெங்காவை மீண்டும் வேறு வழியில் பயன்படுத்தும் வழிமுறைகள்...
![]()
|
திருமண லெஹெங்காக்கள், அவற்றின் வேலைப்பாடு காரணமாக எடை அதிகமாக, கிராண்ட் ஆக இருக்கும். எனவே உங்கள் கணமான லெஹெங்காவை, வேலைப்பாடு இல்லாத மற்றும் எளிமையான பிளெய்ன் பிளவுஸ் உடன் அணியலாம்.
லெஹெங்காவில் அதே நிறத்தில் நெட் துணியை மேலே சேர்த்து பயன்படுத்தலாம். இதனால் அசல் தோற்றம் அப்படியே இருக்கும். அதேவேளையில் சற்று வித்தியாசமான, ஸ்டைலிஷ் தோற்றத்தை தரும்.
![]()
|
வெள்ளை நிறச் சட்டை அணிவது ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஸ்டைலான லுக்கை தரும். எனவே உங்களின் ஆடம்பரமான, அதிக வேலைப்பாடுள்ள லெஹெங்காவை சாதாரண வெள்ளை நிற பட்டன் சட்டையுடன் சேர்த்து அணியலாம். இதற்கு மேட்சிங் ஆக தோடு, நெக்லஸ் அணியும் போது ஸ்டைலான தோற்றம் கிடைக்கிறது; பலரின் பார்வையும் கட்டாயமாக உங்களின் மீது விழும்.
நீளமான பிளெய்ன் குர்தாவுடன் லெஹெங்காவை அணியும் போது, அதன் வேலைப்பாடுகள் மறைய வாய்ப்புள்ளது.
![]()
|