பன்னீர்செல்வம் இப்போது கண்ணீர் செல்வம்: ராஜன் செல்லப்பா கிண்டல்| Dinamalar

பன்னீர்செல்வம் இப்போது கண்ணீர் செல்வம்: ராஜன் செல்லப்பா கிண்டல்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (25) | |
மதுரை: தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு பன்னீர் செல்வம் அதிமுக.,வில் இருந்து விலகி செல்ல வேண்டும் என்றும், பன்னீர்செல்வமாக இருந்த ஓ.பி.எஸ் தற்போது கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார் எனவும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார்.மதுரையில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ.,வான ராஜன் செல்லப்பா நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,வுக்கு வலிமையான தலைமை
ADMK, Rajan Chellappa, OPS, Panneerselvam, அதிமுக, ஓபிஎஸ், பன்னீர்செல்வம், ராஜன் செல்லப்பா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு பன்னீர் செல்வம் அதிமுக.,வில் இருந்து விலகி செல்ல வேண்டும் என்றும், பன்னீர்செல்வமாக இருந்த ஓ.பி.எஸ் தற்போது கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார் எனவும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார்.

மதுரையில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ.,வான ராஜன் செல்லப்பா நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,வுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். ஜுலை 11ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை பொது செயலாளராக அறிவிக்க உள்ளோம். ஓ.பன்னீர் செல்வம் மீது நாங்கள் அன்பு கொண்டவர்கள். அவர் தவறான முடிவு எடுக்கும்போது சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளோம், சட்டசபை தேர்தலில் பன்னீர் செல்வத்தின் நெருங்கியவர்களுக்கு கூட அவர் பிரச்சாரம் செய்யவில்லை. பன்னீர் செல்வம் சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அதிமுக.,வில் எந்தவொரு செல்வாக்குமில்லை.

தென் மாவட்டங்கள் அதிமுக.,வின் கோட்டையாக திகழ்கிறது. தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி உள்ளார் ஓபிஎஸ். திமுக ஆட்சியை வாழ்த்துபவர்கள் துதி பாடுபவர்கள் அதிமுகவிற்கு தலைமை ஏற்க கூடாது. கடந்த சட்டசபை தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் அவர் ஓட்டு சேகரிக்கவில்லை. ஓ.பி.எஸ்க்கு பொதுக் குழுவில் அவமரியாதை ஏற்பட்டதாக சொல்கிறார். அதனை ஓ.பி.எஸ் தவிர்த்து இருக்கலாம். அதிமுக.,வில் 95 சதவீதம் பேர் பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து உள்ளனர். தமிழகத்தில் மிக சிறந்த தலைமையாக பழனிச்சாமி செயல்படுகிறார். தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு பன்னீர் செல்வம் அதிமுக.,வில் இருந்து விலகி செல்ல வேண்டும்.


latest tamil news


பன்னீர்செல்வமாக இருந்த ஓ.பி.எஸ் தற்போது கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார். ஓ.பி.ஸை பல காலம் ஒதுக்கி வைத்தவர் ஜெயலலிதா. அவருக்கு எதிராக எந்த சதி வலையும் பின்னப்படவில்லை. அவரை எங்கும் அவமதிக்கவில்லை. பதவி நீக்கம் செய்வதற்கு முன் ஓ.பி.எஸ் பதவியை விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும், தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் அனுமதி தேவையில்லை. அதிமுகவை நிர்வாகம் செய்ய அவருக்கு தகுதி, திறமை இல்லை. அதிமுக அரசிற்கு எதிராக ஓட்டளித்தவர்களிடம் இனி எதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பழனிச்சாமிதான் அதிமுகவின் பொதுச்செயலாளர், ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஓபிஎஸ். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X