அக்னிபத் திட்டத்தில் சேர்வதற்கு 94 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Updated : ஜூன் 27, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி-முப்படைகளில் பணியாற்ற மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள 'அக்னிபத்' திட்டத்தின் கீழ், விமானப் படையில் அக்னி வீரர்களாக சேர, மூன்று நாட்களில், 94 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.முப்படைகளில் பணியாற்ற, மத்திய அரசு அக்னிபத் என்ற திட்டத்தை 14ம் தேதி அறிவித்தது. அதன்படி, தேர்ந்தெடுக்கப்படுவோர், நான்கு ஆண்டுகள், அக்னி வீரர்கள் என்ற பெயரில் பணியாற்றுவர். இதில்,
Agnipath Scheme, Air Force, 57k Applications, அக்னிபத், விமானப்படை, விமானத்துறை, விண்ணப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-முப்படைகளில் பணியாற்ற மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள 'அக்னிபத்' திட்டத்தின் கீழ், விமானப் படையில் அக்னி வீரர்களாக சேர, மூன்று நாட்களில், 94 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.முப்படைகளில் பணியாற்ற, மத்திய அரசு அக்னிபத் என்ற திட்டத்தை 14ம் தேதி அறிவித்தது. அதன்படி, தேர்ந்தெடுக்கப்படுவோர், நான்கு ஆண்டுகள், அக்னி வீரர்கள் என்ற பெயரில் பணியாற்றுவர். இதில், 25 சதவீதம் பேர், தகுதி அடிப்படையில் முப்படைகளில் பணியைத் தொடரலாம். மீதமுள்ளோருக்கு, 10 - 12 லட்சம் ரூபாய் வரை சேவைத் தொகை வழங்கப்படும்.


latest tamil news





முன்னுரிமை



இந்த திட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, நான்கு ஆண்டு பணிக்குப் பின் ஓய்வு பெறுவோருக்கு துணை ராணுவப் படைகளில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதைத் தவிர மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பல மாநில அரசுகளும், போலீஸ் துறையில் வாய்ப்பு தருவதாக அறிவித்தன. வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதாக, பல தனியார் தொழில் நிறுவனங்களும் அறிவித்தன.இத்திட்டத்தை எதிர்த்து கல் வீச்சு, தீவைத்தல் போன்றவன்முறையில் ஈடுபட்டோருக்கு படையில் சேர வாய்ப்பு மறுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.



வரவேற்பு



இதையடுத்து பல மாநிலங்களில் நடந்த போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வந்தன. அதே நேரத்தில், இந்த திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இதற்கிடையே, விமானப் படையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கான அறிவிப்பு, 24ம் தேதி வெளியிடப்பட்டது. வரும், ஜூலை 5ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.இந்த அறிவிப்பு வெளியாகி மூன்று நாட்களில் மட்டும், 94 ஆயிரத்து, 281 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் விமானப் படை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
28-ஜூன்-202211:10:20 IST Report Abuse
Venkatakrishnan வெட்கமில்லாத சங்கிக் கூட்டம் நாட்டிற்காக உழைக்க என்னும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திட்டங்களை ஆதரிக்கிறார்கள்...
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
28-ஜூன்-202211:06:08 IST Report Abuse
Venkatakrishnan நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடும்போது பாவம் இளையசமுதாயத்துக்கு வேறென்ன வழி...?
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் அடப் போங்கைய்யா!! மரத் தமிழர் தளபதி இன்பாண்ணாவின் இனிய தாத்தா பாட்டில் பாத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இத் திட்டத்தில் தன்னை அர்ப்பணிக்கும் மரத்த தமிழ் இளைஞர்களுக்கு பாட்டில் வீரன் என்ற பட்டமும் கோடிக்காக சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளத. இதை விட்டு எவனாவது புத்தியுள்ளவன் அக்னி பாத் பக்கம் போவானா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X