இதே நாளில் அன்று

Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
ஜூன் 28, 1921தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம், வான்கரா கிராமத்தில், சீதாராமராவ் - ருக்மாபாய் தம்பதிக்கு மகனாக, 1921ல் இதே நாளில் பிறந்தவர் பாமுலபர்த்தி வெங்கட நரசிம்ம ராவ். இவர், இளமைக் காலத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.பின், காங்கிரசில் இணைந்து, இந்திராவின் நம்பிக்கையை பெற்று, மத்திய அரசில், சட்டம், உள்துறை, பாதுகாப்பு, மனிதவள துறைகளின் அமைச்சராக
இதே நாளில் அன்று


ஜூன் 28, 1921



தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம், வான்கரா கிராமத்தில், சீதாராமராவ் - ருக்மாபாய் தம்பதிக்கு மகனாக, 1921ல் இதே நாளில் பிறந்தவர் பாமுலபர்த்தி வெங்கட நரசிம்ம ராவ். இவர், இளமைக் காலத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.பின், காங்கிரசில் இணைந்து, இந்திராவின் நம்பிக்கையை பெற்று, மத்திய அரசில், சட்டம், உள்துறை, பாதுகாப்பு, மனிதவள துறைகளின் அமைச்சராக இருந்தார். ஆந்திர முதல்வராகவும் பதவி வகித்தார். ராஜிவ் மரணத்துக்குப் பின், காங்கிரஸ் தலைவரானார். ௧௯௯௧ முதல், ௧௯௯௬ வரை நாட்டின், 10வது பிரதமராக இருந்தார்; அப்போது, நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருந்தது. மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கி, தொழில்துறையில் தனியார்மயத்தை புகுத்தியதுடன், வெளிநாட்டு வர்த்தகம் வாயிலாகவும், நிதி நிலைமையை சரிசெய்தார்.
இருப்பினும், காங்கிரசாரின் ஊழல், எதிர்க்கட்சிகளின் மதக்கலவரங்கள், வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றால், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. 2004 டிசம்பர், 23ல், தன், 83வது வயதில் நரசிம்மராவ் மாரடைப்பால் காலமானார். தென் மாநிலத்திலிருந்து நாட்டை ஆண்ட முதல் பிரதமரின் பிறந்த தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X