விமான நிலையத்தில் பனை மரம் வடிவில் துாண்கள்

Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
சென்னை :சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் நவீன சர்வதேச முனைய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள துாண்கள் பனை மரம் போல வடிவமைக்கப்பட்டு, அழகாக காட்சியளிக்கின்றன.சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி, 2018 செப்டம்பரில் துவங்கியது.மொத்தம், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் இந்த புதிய முனையம் வாயிலாக, ஓர்
விமான நிலையத்தில் பனை மரம் வடிவில் துாண்கள்

சென்னை :சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் நவீன சர்வதேச முனைய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள துாண்கள் பனை மரம் போல வடிவமைக்கப்பட்டு, அழகாக காட்சியளிக்கின்றன.சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி, 2018 செப்டம்பரில் துவங்கியது.மொத்தம், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் இந்த புதிய முனையம் வாயிலாக, ஓர் ஆண்டில் கையாளப்படும் பயணியரின் எண்ணிக்கை, 1.7 கோடியிலிருந்து, 3.5 கோடியாக அதிகரிக்கும்.இந்த புதிய முனையத்தில், கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில் சர்வதேச வருகை பயணியருக்கான, வழக்கமான நடைமுறைகள்; இரண்டாவது தளத்தில், பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், ஐந்து தளங்கள் இந்த புதிய முனையத்தில் அமைகின்றன.அவ்வாறு கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், பனை மரம் போல துாண்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சர்வதேச நவீன முனையம் ஐந்து தளங்களில் அமைகிறது. இதில், புறப்பாடு பயணியருக்கான இரண்டாவது தளத்திலும், முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தளத்திலும் உள்ள துாண்களும் பனைமரம் போல் வடிவமைக்கப்பட்டு, அழகாக காட்சியளிக்கின்றன.இதற்காக, கட்டட துாண்கள் வடிவமைக்கும் போது, 'மரம் வடிவில் துாண்கள்' என்ற பிரிவு தனியாக உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை குறிக்கும் வகையில் இவ்வாறு வடிவமைக்கப்பட்டது.இதன் படி, எட்டு துாண்கள் பனை மரம் போல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு துாண்களின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X