போதை கணவர் அடித்து கொலை

Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
ஆவடி, :ஆவடி அருகே, போதையில் கொடுமைப்படுத்தி வந்த கணவரை, ஆத்திரத்தால் மனைவி செங்கல்லால் அடித்து கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை தும்பூர் கிராமத்தில் உள்ள தனியார் தார் தொழிற்சாலையில் தங்கி வேலை செய்தவர் கிருஷ்ணன், 37. இவரது மனைவி விஜயலட்சுமி, 27. இவரது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார்
போதை கணவர் அடித்து கொலை


ஆவடி, :ஆவடி அருகே, போதையில் கொடுமைப்படுத்தி வந்த கணவரை, ஆத்திரத்தால் மனைவி செங்கல்லால் அடித்து கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை தும்பூர் கிராமத்தில் உள்ள தனியார் தார் தொழிற்சாலையில் தங்கி வேலை செய்தவர் கிருஷ்ணன், 37. இவரது மனைவி விஜயலட்சுமி, 27. இவரது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார் கிராமத்தில் படிக்கின்றனர்.கடந்த 10 ஆண்டுகளாக கிருஷ்ணன் குடித்து, விஜயலட்சுமியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும், தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த விஜயலட்சுமி, அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து, கிருஷ்ணனின் தலையில் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.தகவலறிந்த ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, விஜயலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X