அணி மாறிய எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய தடை!

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 27, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி :சிவசேனாவுக்கு எதிராக அணி திரண்டுள்ள அதிருப்தியாளர்களை தகுதி நீக்கம் செய்ய, உச்ச நீதிமன்றம் ஜூலை 11ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பதிலளிக்கும்படி, சட்டசபை துணை சபாநாயகர், மாநில அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதி வரை தடை உள்ளதால், அடுத்து என்ன நடக்குமோ என, மஹாராஷ்டிர அரசியல் கட்சிகள், 'திக் திக்'
அணி  எம்.எல்.ஏ.,க்கள் , தகுதி நீக்கம்  தடை!

புதுடில்லி :சிவசேனாவுக்கு எதிராக அணி திரண்டுள்ள அதிருப்தியாளர்களை தகுதி நீக்கம் செய்ய, உச்ச நீதிமன்றம் ஜூலை 11ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பதிலளிக்கும்படி, சட்டசபை துணை சபாநாயகர், மாநில அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

வரும் 11ம் தேதி வரை தடை உள்ளதால், அடுத்து என்ன நடக்குமோ என, மஹாராஷ்டிர அரசியல் கட்சிகள், 'திக் திக்' மனநிலையில் உள்ளன.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சிவசேனாவின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே தலைமையில், பல எம்.எல்.ஏ.,க்கள், தலைமைக்கு எதிராக அணி திரண்டுள்ளனர்.


நிராகரிப்பு



இதனால், உத்தவ் தாக்கரே அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் பரஸ்பரம் புகார் கூறி வருகின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக மஹாராஷ்டிரா அரசியல், பரபரப்புடன் காணப்படுகிறது.
இதற்கிடையே, மஹாராஷ்டிரா சட்டசபையில் சபாநாயகர் பதவி காலியாக உள்ளது. இதையடுத்து, தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கும் வகையில், துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அதிருப்தியாளர் குழு தாக்கல் செய்துள்ளது. ஆனால், அதை துணை சபாநாயகர் நிராகரித்தார்.இந்நிலையில், ஏக்னாத் ஷிண்டே உட்பட, 16 எம்.எல்.ஏ.,க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யும்படி, முதல்வர் உத்தவ் தாக்கரே தரப்பில் வலியுறுத்தப்பட்டது.


அதிருப்தி



இது தொடர்பாக பதிலளிக்கும்படி, 16 எம்.எல்.ஏ.,க்களுக்கு, துணை சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பினார். இதற்கு பதிலளிக்க நேற்று கடைசி நாளாகும்.இந்த சூழ்நிலையில், தங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட நோட்டீசை எதிர்த்து, அதிருப்தியாளர்கள் குழு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பர்திவாலா அடங்கிய விடுமுறை கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மும்பை உயர் நீதிமன்றத்தை நாடாமல், உச்ச நீதிமன்றம் வந்தது ஏன்?' என, அதிருப்தியாளர்கள் குழுவிடம் அமர்வு கேள்வி
எழுப்பியது.மும்பையில் தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், உச்ச நீதிமன்றத்தை நாடியதாக அதிருப்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அதிகாரம் இல்லை



தாங்கள் துணை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ள நிலையில், தங்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்க, அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் அதிருப்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கிடையே, 'சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடக் கூடாது' என, மஹாராஷ்டிர அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அமர்வு நிராகரித்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து துணை சபாநாயகரே எப்படி முடிவு எடுக்க முடியும்? அதிருப்தியாளர்கள் மீது தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை எடுக்க, ஜூலை 11ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அதிருப்தியாளர்கள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, துணை சபாநாயகர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கூடாது என்ற மாநில அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அவ்வாறு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டால், அதில் சட்ட விதிமீறல் இருந்தால், மாநில அரசு வழக்கு
தொடரலாம்.


'திக் திக்' மனநிலை



அதிருப்தியாளர்கள் குழுவில் உள்ள, 39 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரின் உயிர், சொத்துக்களுக்கு மாநில அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது பதிவு செய்யப்படுகிறது.
வழக்கின் விசாரணை, ஜூலை 11க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.கடந்த சில நாட்களாக பல அரசியல் நிகழ்வுகள் நடந்துள்ள நிலையில், 11ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அடுத்து என்ன நடக்குமோ என, மஹாராஷ்டிர கட்சிகள், 'திக் திக்' மனநிலையில் உள்ளன.

தொடரும் அரசியல் குழப்பம்


ஒரு பக்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில், மஹாராஷ்டிராவில் நேற்றும் அரசியல் நடவடிக்கைகள், குழப்பங்கள் தொடர்ந்தன. * அசாமின் கவுஹாத்தியில், நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அதிருப்தியாளர்கள் குழுவில் உள்ள ஏக்னாத் ஷிண்டே உள்ளிட்ட, ஒன்பது அமைச்சர்களின் பொறுப்புகளை பறித்து, முதல்வர் உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுத்துள்ளார் * இதையடுத்து மாநில அமைச்சரவையில் சிவசேனாவின் அமைச்சர்கள் எண்ணிக்கை நான்காக குறைந்துள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரே, அவருடைய மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் இருவர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர் * மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் நடந்த மோசடி மற்றும் அதில் நடந்துள்ள, 901 கோடி ரூபாய் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்டோர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. இதில், ராவத்தின் மனைவி பெயரில் உள்ள, 11.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி சஞ்சய் ராவத்துக்கு, அமலாக்கத் துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது * 'அசாமில் இருந்து, 40 உடல்கள் வரும். அவை பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும்' என, சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் கூறினார். இதற்கு அதிருப்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'மனசாட்சியை தொலைத்தவர்கள் உயிருடன் இருக்கும் பிணங்களே. இதைக் குறிப்பிடும் வகையிலேயே பேசினேன். சட்ட ரீதியாகவும், தெருவில் இறங்கியும் போராட நாங்கள் தயார்' என, சஞ்சய் ராவத் நேற்று விளக்கம் அளித்தார் * 'அதிருப்தியாளர்கள், அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி, மாநிலத்தின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களை மாநிலத்துக்கு திரும்பி தங்களுடைய கடமையை செய்யும்படி உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் சிலர் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளனர்.




ராஜினாமா செய்ய தயாராக இருந்த உத்தவ் தாக்கரே


கட்சிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் உருவானதை தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து விலக உத்தவ் தாக்கரே இரண்டு முறை முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து சிவசேனா மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது: கடந்த, 20ம் தேதி ஏக்னாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தியாளர்கள் குஜராத்தின் சூரத்துக்கு சென்றனர். இது குறித்து, 21ம் தேதி தான் தெரியவந்தது. இதனால் அதிருப்தி அடைந்த உத்தவ் தாக்கரே தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார். அன்று மாலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கட்சியினருடன் பேசியபோது, தன் முடிவை அறிவிக்க திட்டமிட்டிருந்தார். கூட்டணியில் உள்ள மூத்த தலைவர்கள் அவரை சந்தித்து பேசி, சமாதானப்படுத்தினர். இதற்கடுத்த நாள், அதாவது, 22ம் தேதி நிலைமை கைமீறியதை உணர்ந்த உத்தவ் தாக்கரே, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். மீண்டும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசியதை தொடர்ந்து, அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். இவ்வாறு அவர்கள் கூறினர். உத்தவ் தாக்கரேயை சமாதானப்படுத்திய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் என்பதை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அதே நேரத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்தான், உத்தவ் தாக்கரேயை சந்தித்து சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.





புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
28-ஜூன்-202212:30:56 IST Report Abuse
M  Ramachandran முற்பகல் செய்த வினையை (துரோகத்திற்கு) தன வினை தன்னை சுடும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-ஜூன்-202212:29:25 IST Report Abuse
M  Ramachandran செய்த வின. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நம்பிக்கையை துரோகத்திற்கு பலன் அனுபவிக்க வேண்டியதுதான்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
28-ஜூன்-202212:11:41 IST Report Abuse
raja உடனே அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் பிஜேபி கொண்டு வரவேண்டும்... துரோகி தாக்ரே அரசு கவிழ வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X