வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பதாக, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி மீது, காங்., முன்னாள் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில் அவர்கள் இருவரும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர்.
![]()
|
நெருங்கிய நட்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குறிப்பாக, முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகிய இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு முக்கியத்துவம் தருவதாக அவர் கூறி வருகிறார்.இந்தாண்டு பிப்.,ல் பார்லிமென்டில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல், 'முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகிய இரண்டு தொழில்அதிபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு சலுகை காட்டுகிறது. 'அதே நேரத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நசுக்கப்படுகின்றன' என்றார். கடந்த, 2021ல் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த போராட்டத்தின்போது ராகுல் பேசுகையில், 'நாம் இருவர், நமக்கு இருவர் என்பதே மத்திய அரசு கொள்கையாக உள்ளது. 'விமான நிலையங்கள், துறைமுகம், நிலக்கரி சுரங்கம், சூப்பர் மார்க்கெட் என எங்கு பார்த்தாலும், அம்பானி மற்றும் அதானி மட்டுமே தெரிகின்றனர். இது அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் தவறு' என்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெலாட், தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய நட்பு வைத்து உள்ளார். அவருடைய முயற்சியால், அந்த மாநிலத்தில், அம்பானி, அதானி இருவரும், டிச., 2021ல் இருந்து, இந்தாண்டு மார்ச் வரை, 1.68 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துஉள்ளனர்.
![]()
|
'கிரீன் எனர்ஜி'
மாநில அரசின் புள்ளி விபரங்களின்படி, இந்த காலகட்டத்தில் முகேஷ் அம்பானியின் 'ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார்' நிறுவனம், ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. கவுதம் அதானியின் 'கிரீன் எனர்ஜி' நிறுவனம், 60 ஆயிரம் கோடி ரூபாயும், 'அதானி இன்ப்ரா லிமிடெட்' நிறுவனம், 5,000 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன.இதைத் தவிர, கவுதம் அதானியின் 'டோட்டல் காஸ்' நிறுவனம், 3,000 கோடி ரூபாயும், 'வில்மர்' நிறுவனம், 246.08 கோடி ரூபாயும் முதலீடு செய்துஉள்ளன.
- புதுடில்லி நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement