பணப் பரிமாற்ற மோசடிநடிகை மீண்டும் ஆஜர்| Dinamalar

பணப் பரிமாற்ற மோசடிநடிகை மீண்டும் ஆஜர்

Added : ஜூன் 27, 2022 | |
புதுடில்லி,- மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் தொடர்புடைய பணப் பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக, பிரபல 'பாலிவுட்' நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ், அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று மீண்டும் ஆஜரானார்.கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், சென்னையில் வசித்து வந்தார். இவர் மீது, பணம் கேட்டு மிரட்டியது, பணப் பரிமாற்ற மோசடி உட்பட பல வழக்குகள் உள்ளன. பிரபல

புதுடில்லி,- மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் தொடர்புடைய பணப் பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக, பிரபல 'பாலிவுட்' நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ், அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று மீண்டும் ஆஜரானார்.



கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், சென்னையில் வசித்து வந்தார். இவர் மீது, பணம் கேட்டு மிரட்டியது, பணப் பரிமாற்ற மோசடி உட்பட பல வழக்குகள் உள்ளன. பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் உடன் நட்புடன் இருந்த இவர், அவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பு உள்ள பொருட்களை பரிசாக வழங்கியுள்ளார்.குற்ற நடவடிக்கைகள் வாயிலாக கிடைத்த பணத்தை அவர் பரிசாக அளித்தது குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.



இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் பெர்னான்டசிடம் ஏற்கனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்திஉள்ளது.இந்நிலையில், அமலாக்கத் துறை 'சம்மன்' அனுப்பியதைத் தொடர்ந்து, புதுடில்லியில் உள்ள அலுவலகத்தில் அவர் நேற்று மீண்டும் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பான பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X